சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,08,280க்கு விற்பனை!!

Priya
1625 Views
1 Min Read

அக்டோபர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த தங்கம் விலை கடந்த 4 நாட்களாகவே தொடர் சரிவை கண்டு வருகிறது.

அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.13,515க்கும், ஒரு சவரன் ரூ.1,08,120க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து வார கடைசியான இன்று தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,535க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,125க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.89,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.240க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply