உங்களை தனிப்பட்ட முறையில் விமர்சித்த ‘இவர்’ மீது நடவடிக்கை எடுக்க “தைரியம் இருக்கா”..? முதல்வருக்கு சுளீர் கேள்வி…

Priya
862 Views
1 Min Read

பெண்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவெக-வினர் மிக மோசமான கருத்துகளைப் பதிவிடுகிறார்கள். சென்னை மேயர் பிரியா உட்பட எதிர்க்கட்சியை சேர்ந்த பெண்கள் பற்றி சமூக ஊடகங்களில் இழிவாக தவெக-வினர் பதிவிடுகின்றனர்.

இது குறித்துப் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார். செய்தியாளர்களிடம் இன்று பேசிய கனிமொழி எம்.பி, முதலமைச்சரின் மனம் கோணும்படி எது நடந்தாலும் உடனடியாகக் கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுக்கிறார்கள். நாதக பெண் வேட்பாளர் கார்த்திகாவை உடை மாற்றக்கூட நேரம் கொடுக்காமல், அதுவும் காலையிலேயே அத்துமீறி கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன.? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

சொல்ல போனால் தவெக. அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதான் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. விழுப்புரம் அருகே சிறுமி காணாமல் போய் 10 நாள்கள் ஆகின்றன. இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையை தன் பொறுப்பில் வைத்துள்ள முதலமைச்சரோ, பஞ்ச் டயலாக் மட்டுமே அவ்வபோது பேசி கொண்டு இருக்கிறார்.

பழிவாங்கும் நோக்கில் தேவையற்ற பல கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்த அரசு, பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சரைக் கடுமையாக, தனிப்பட்ட முறையில் விமர்சித்து இருக்கிறார், அவர் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவர் மீது நடவடிக்கை எடுக்க இதே தவெக அரசுக்குத் தைரியம் இருக்கிறதா..? என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். தவெக பெண் அமைச்சர் அவதூறாக பேசிய விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்றும் கேட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply