போதை வேண்டாம்; எதிர்காலத்தைச் சிதைக்க வேண்டாம் – கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் டிஜிபி சங்கர் அறிவுரை

Priya
609 Views
1 Min Read

சென்னை கே.கே. நகரில் உள்ள மீனாட்சி பொறி​யியல் கல்​லூரி​யில், கல்​லூரி வளாகங்​களில் போதைப்​பொருள் மற்​றும் புகை​யிலை பயன்​பாட்​டைத் தடுக்க, போதைப்​பொருள் தடுப்பு மன்​றங்​கள் மற்​றும் தன்​னார்​வலர்​களுக்​கான சிறப்​புப் பயிற்​சிப் பட்​டறை நேற்று நடை​பெற்​றது.

தமிழக போதைப் பொருள் தடுப்பு பிரிவு கூடு​தல் டிஜிபி கே.சங்​கர் தலைமை தாங்​கி​னார். கல்வி நிறு​வனங்​களில் போதைப்​பொருள் பயன்​பாட்டை முற்​றி​லும் ஒழிப்​ப​தில் கல்​லூரி முதல்​வர்​கள், பேராசிரியர்​கள், தன்​னார்​வல மாணவர்களுக்கு முக்​கியப் பங்கு இருப்​ப​தாக​வும், மாணவர்​கள் போதைப் பொருள் வலை​யில் சிக்கி எதிர்​காலத்தை தொலைக்க வேண்​டாம் என வலிவுறுத்​தி​னார்.

போதைப் பொருளை தடுப்​ப​தில் போதைப்​பொருள் தடுப்பு மன்​றங்​களின் கடமை​கள், பொறுப்​பு​கள், செயல்​பாடு​கள் குறித்து மாணவர்​களுக்கு விரி​வான பயிற்சி அளிக்​கப்​பட்​டது. நிகழ்ச்​சி​யில் 30 கல்​லூரி​களின் முதல்​வர்​கள் மற்​றும் 300-க்​கும் மேற்​பட்ட மாணவர் தன்​னார்​வலர்​கள் பங்​கேற்​றனர்.

கல்வி வளாகங்​களில் போதைப்​பொருள் பயன்​பாட்​டைத் தடுக்​க​வும், விழிப்​புணர்வை ஏற்​படுத்​த​வும் அவர்​கள் உறு​தி​மொழி ஏற்​றனர். புதி​தாகக் கல்​லூரி​யில் சேரும் மாணவர்​களுக்கு போதைப்​பொருட்​களால் ஏற்​படும் பாதிப்​பு​கள், போதைப்​பொருள் தடுப்​புச் சட்​டத்​தின் கீழான தண்​டனை​கள், ஆலோ​சனை பெறும் வழி​முறை​கள் குறித்து விழிப்​புணர்வு ஏற்​படுத்த முடிவு செய்​யப்​பட்​டது.

மாணவர்​களிடையே ஆரம்ப நிலை​யிலேயே போதைப்​பழக்க அறிகுறிகளைக் கண்​டறிந்​து, அவர்​களுக்கு உரிய உதவி​களை வழங்க சக மாணவர் தூதர்​கள் நியமிக்​கப்பட உள்​ளனர்.

மேலும், கல்​லூரி​களைச் சுற்​றி​யுள்ள 100 மீட்​டர் பகு​தி​யில் புகை​யிலைப் பொருட்​கள் விற்​பனையைத் தடுக்க காவல்​துறை, உணவுப் பாது​காப்​புத் துறை​யினர் மூலம் கண்​காணிப்பு மேற்​கொள்​ள​வும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

கல்​லூரி வளாகங்​களில் கண்​காணிப்பு கேம​ராக்​கள் பொருத்​துதல், ‘போதைப்​பொருளற்ற தமிழ்​நாடு’ செயலி மூலம் புகார்​களைத் தெரி​வித்​தல், விழிப்​புணர்வு பேரணி​கள், தெரு​நாடகங்​கள் மற்​றும் உளவியல் ஆலோ​சனை நடவடிக்​கைகளை மேற்​கொள்​ளுதல் குறித்​தும் பயிற்சி அளிக்​கப்​பட்​டது.

கல்வி நிறு​வனங்​களில் போதைப்​பொருள் பயன்​பாட்​டைத் தடுத்​து, மாணவர்​களுக்கு பாது​காப்​பான கல்​விச் சூழலை உரு​வாக்​கு​வதே இத்​திட்​டத்​தின் முக்​கிய நோக்​கம்​ என்​று அதி​காரி​கள்​ தெரிவித்​தனர்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply