காவிரியில் 45 நாட்களுக்கு நீர் திறப்பு என்ற அறிவிப்பை முதல்வர் திரும்ப பெற பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

Priya
860 Views
2 Min Read

காவிரி டெல்டா மரபை மீறிய 45 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு என்ற நீர்ப் பாசனத் துறை அறிவிப்பை முதல்வர் திரும்ப பெற வேண் டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அவசரக் கூட்டம் திருவாரூரில் நடை பெற்றது. புதுச்சேரி மாநிலத் தலைவர் பொன் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

இதில் பங்கேற்ற பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: மேட்டூர் அணையில் முதல்வர் தண்ணீர் திறந்துள்ளார்.

இதை மாவட்ட அளவில் வருவாய்த் துறை, நீர்பாசனத் துறை, வேளாண்மைத் துறை, காவல் துறை ஆகிய துறைகளைக் கொண்ட கண்காணிப்பு குழுக் கள் ஏற்படுத்தி முதலில் குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலை களை நிரப்ப வேண்டும்.

15 தினங்களுக்குப் பிறகு விளை நிலங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்வதற்கான நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் காவிரி டெல்டாவில் கோடை மழை பெய்யாததால் கோடை உழவு செய்ய முடியாமல் நேரடி விதைப்பும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, 15 நாட்களுக்கு பிறகு சாகுபடிக்கு தண்ணீரை பாசனப் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.

‘காவிரி டெல்டா மரபை மீறிய 45 தினங்களுக்கு தண்ணீர் திறப்பு’ என்ற நீர்ப்பாசனத் துறை அறிவிப்பை முதல்வர் திரும்ப பெற வேண்டும். ஜனவரி 28 வரை தண்ணீரை திறக்க வேண்டும். மேட்டூர் அணை மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 25 லட்சம் ஏக்கர் சாகுபடி மேற்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து தமிழக அரசு செயல்பட முன்வர வேண்டும்.

காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணை கட்ட சட்ட விரோதமாக முயற்சிக்கும் கர்நாடக முதல்வர் சிவகுமார், தமிழகம் கடலிலே தண்ணீரை கலக்கச் செய்வதாக உண்மைக்கு புறம்பான பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதை முறியடித்து, கர்நாடக- தமிழக விவசாயிகள் நலன் கருதி முன்னாள் முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டிய ராசிமணலில் புதிய அணை கட்ட திட்டமிட வேண்டும்.

மேகதாட்டு அணையை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பிரச்சார பயணத்தை செப்டம்பர் 20-ம் தேதி பூம்புகாரில் தொடங்க உள்ளோம். காவிரி டெல்டா மாவட்டங்கள் வழியாக சென்று ஈரோடு, தருமபுரி, வேலூர், சென்னை, புதுச்சேரி மாநிலங்கள் வழியாக செப்.24-ல் திருவாரூரில் பிரச்சார பயணத்தை நிறைவு செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply