அக்டோபர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த சனிக்கிழமை தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. வார தொடக்கமான நேற்றும் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.13,675க்கும், ஒரு சவரன் ரூ.1,09,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.13,660க்கும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.11,225க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ89,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

