தங்கம் விலை மீண்டும் ஏற்றம்: இன்று பவுனுக்கு ரூ.760 உயர்வு

Priya
1217 Views
1 Min Read

22 காரட் ஆபரணத் தங்கம் விலை சென்னையில் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. இன்று (நவ.9) காலை சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் பவுனுக்கு ரூ.760 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்நிலையில், தங்கம் விலை கடந்த சனிக்கிழமை அன்று பவுனுக்கு ரூ.160 என்று உயர்ந்தது. கடந்த வாரம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது வர்த்தக நாளில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகளின் தாக்கம் இது என்று சர்வதேச வணிக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்றைய விலை விவரம்

சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,255-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,06,040-க்கு விற்பனை ஆகிறது.

24 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.832 உயர்ந்து, ஒரு பவுன் 1,15,680-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.205-க்கும், ஒரு கிலோ ரூ.2,05,000-க்கும் விற்பனை ஆகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply