தொடர் உயர்வுக்கு பிறகு தங்கம் விலை சரிவு: இன்று பவுனுக்கு ரூ.1,960 குறைவு

Priya
1001 Views
2 Min Read

கடந்த சில தினங்களாக தங்கம் விலை விலை உயர்ந்த நிலையில் இன்று (நவ.6) அதிரடியாக சரிந்துள்ளது. இன்று காலை சென்னையில் சந்தை தொடங்கியதும் தங்கம் வேலை பவுனுக்கு ரூ.1,960 என்று குறைந்தது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்கம் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மே மாதம் தங்கம் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இதோடு கடந்த செப்.1-ம் தேதி அன்று ‘தேவையின்றி தங்கம் வாங்காதீர்கள்’ என நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதையடுத்து தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகிறது.

இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்தது. நவ.2 முதல் நவ.5 வரையில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு மொத்தமாக ரூ.5,240 என்று உயர்ந்தது.

இன்றைய விலை விவரம்

சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.245 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,140-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.1,960 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,05,120-க்கு விற்பனை ஆகிறது.

24 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,136 குறைந்து, ஒரு பவுன் 1,14,680-க்கும், 18 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு பவுன் ரூ.86,080-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.205-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,05,000-க்கும் விற்பனை ஆகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply