70 வயது நிரம்பிய முதியவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

Priya
7 Views
1 Min Read

தமிழக சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடர் மானிய கோரிக்​கை​யின் போது மூத்த குடிமக்​களுக்கு கட்​ட​ணமில்லா மருத்​துவ சிகிச்சைகள் பெறும் வகை​யில் முதல்​வரின் முதி​யோர் காப்​பீட்டு திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.

புற்​றுநோய் சிகிச்​சைகள், இதய அறுவை சிகிச்​சைகள், உறுப்பு மாற்று சிகிச்​சைகள், உயர்​தர பரிசோதனைகள் உள்​பட காப்​பீட்டு திட்​டத்​தின் கீழ் வழங்​கப்​படும் அனைத்து சிகிச்​சைகளும் அங்​கீகரிக்​கப்​பட்ட அரசு மற்​றும் தனியார் மருத்​து​வ​மனைகளில் அளிக்​கப்​படும் என்று சுகாதா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் அறி​வித்​திருந்​தார்.

அதன்​படி, தமிழகத்​தில் 70 வயது நிரம்​பிய 38 லட்​சம் முதி​ய​வர்​களுக்கு வரு​மான உச்ச வரம்​பின்றி அரசு காப்​பீட்​டின் கீழ் கட்​ட​ணமில்லா சிகிச்சை அளிப்​ப​தற்​கான அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: ஆயுஷ்​மான் பாரத் திட்​டத்​தில் ஏற்​கெனவே இடம்​பெற்​றுள்ள 70 வயதுக்கு மேற்​பட்ட முதி​ய​வர்​களும், அத்​திட்​டத்​தில் இடம்​பெறாத முதி​ய​வர்​களும், இத்​திட்​டத்​தில் இணைக்​கப்​படுவர்​கள்.

பயனாளி​கள் சேர்க்கை, இ-சேவை மையங்​கள் மூலமாகவும், அரசு காப்​பீடு பதிவு செய்​வதற்​கான பிற மையங்​கள் மூலமாகவும் மேற்​கொள்​ளப்​படும். புதிதாக இணை​யும் 70 வயதுக்கு மேற்​பட்ட மூத்த குடிமக்​களுக்கு ரூ.849 என்ற வீதத்​தில் காப்​பீட்டு தவணை தொகை யுனைடெட் இந்​தியா காப்​பீட்டு நிறு​வனத்​துக்கு வழங்​கப்​படும்.

அடுத்த ஆண்டு புதிய காப்​பீட்டு நிறு​வனத்​துக்​கான ஒப்​பந்​தப்​புள்ளி கோரப்​படும் போது பிரீமியம் தொகை​யில் மாற்​றங்​கள் ஏற்​பட வாய்ப்​புள்​ளது. தற்​போது முதல்​வர் காப்​பீட்​டில் உள்ள அனைத்து மருத்​துவ சேவை​களும் முதி​யோர் காப்​பீட்டு திட்​டத்​திலும் செயல்​படுத்​தப்​படும்.

தமிழ்​நாடு சுகாதார சேவை​கள் திட்ட இயக்​குநரின் கோரிக்​கையை ஏற்று, நிதித்​துறை​யின் ஒப்​புதலுடன் இத்​திட்​டத்தை செயல்​படுத்த அரசு அனுமதி அளித்​துள்​ளது. பயனாளி​களை சேர்ப்​ப​தற்கு முன்பு அவர்​களது சுய விவரங்​கள் முறை​யாக சரிபார்க்​கப்​பட வேண்​டும் என நிபந்​தனை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், முதல்​வர் காப்​பீடு, ஆயுஷ்​மான் பாரத் உள்​ளிட்ட திட்​டங்​களில் உள்ள பயனாளிக்கு இரட்டை பலன் கிடைக்​காதவாறு இதனை செயல்​படுத்​து​வது முக்​கியம். இந்த விஷயங்​களை திட்ட இயக்​குநர் உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு அரசாணை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply