பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக 6 மாநகரங்களில் 2,355 அதிநவீன சிசிடிவி கேமராக்கள்

Priya
790 Views
2 Min Read

பெண்​கள், குழந்​தைகள் மற்​றும் பாது​காப்​பற்ற நிலை​யில் உள்​ளவர்​களின் பாது​காப்பை உறுதி செய்​யும் வகை​யில், சென்னை உள்பட தமிழகத்​தின் 6 மாநகரங்​களில் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​துடன் கூடிய 2,355 அதிநவீன கண்​காணிப்பு கேம​ராக்​களை பொருத்த காவல்​துறை திட்​ட​மிட்​டுள்​ளது.

இதற்​காக 6 மாநகரங்​களில் ஒருங்​கிணைந்த கண்​காணிப்பு ஒளிப்​ப​திவு மையங்​களை அமைக்க தமிழ்​நாடு காவல்​துறை​யின் தொழில்​நுட்ப சேவை​கள் பிரிவு டெண்​டர் வெளி​யிட்​டுள்​ளது.

இந்த திட்​டத்​தின்​படி சென்​னை, தாம்​பரம், ஆவடி, மதுரை, திருச்​சி, கோயம்​புத்​தூர் ஆகிய 6 மாநகரங்​களில் மொத்​தம் 1,045 இடங்​களில் 2,355 அதிநவீன சிசிடிவி கேம​ராக்​கள் பொருத்​தப்பட உள்​ளன.

இதில் சென்​னை​யில் 55 இடங்​களி​லும், தாம்​பரத்​தில் 75 இடங்​களி​லும், ஆவடி​யில் 75 இடங்​களி​லும், மதுரை​யில் 70 முக்​கிய இடங்​கள் மற்​றும் 210 தனி இடங்​களி​லும், திருச்​சி​யில் 70 முக்​கிய இடங்​கள் மற்​றும் 210 தனி இடங்​களி​லும், கோயம்​புத்​தூரில் 280 இடங்​களி​லும் கண்​காணிப்பு கேம​ராக்​கள் அமைக்​கப்பட உள்​ளன.

பள்​ளி​கள், கல்​லூரி​கள், பெண்​கள் கல்​லூரி​கள், பஸ் நிலை​யங்​கள், ரயில் நிலை​யங்​கள், சந்​தைகள், பூங்​காக்​கள், மருத்​து​வ​மனை​கள், வழி​பாட்டு தலங்​கள் மற்​றும் மக்​கள் அதி​கம் கூடும் முக்​கிய சந்​திப்​பு​கள் ஆகியவை இதற்​காக தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளன.

இந்த கேம​ராக்​கள் சாதா​ரண​மாக காட்​சிகளை பதிவு செய்​யும் கருவி​களாக மட்​டுமின்​றி, செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தின் உதவி​யுடன் பல்​வேறு கண்​காணிப்பு பணி​களை மேற்​கொள்​ளும் வகை​யில் வடிவ​மைக்​கப்பட உள்​ளன.

கடந்து செல்​லும் வாக​னங்​களின் எண் பலகைகளை தானாகவே அடை​யாளம் கண்டு பதிவு செய்​யும் வசதி இதில் இடம்​பெறுகிறது.

திருட்டு வாக​னங்​கள் மற்​றும் தேடப்​படும் வாக​னங்​கள் கண்​டறியப்​பட்​டால் காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு உடனடி​யாக எச்​சரிக்கை தகவல் அனுப்​பப்​படும். எண் பலகை இல்​லாத வாக​னங்​களை​யும் கண்​டறிய முடி​யும்.

5 விநாடிகளில் அடையாளம்

மேலும், முக அடை​யாளம் காணும் நவீன தொழில்​நுட்​ப​மும் இதில் இடம்​பெறுகிறது. ஒரே நேரத்​தில் 20-க்​கும் மேற்​பட்ட நபர்​களின் முகங்​களை அடை​யாளம் காணும் திறன் கொண்​ட​தாக இந்த அமைப்பு இருக்​கும்.

சுமார் 50 லட்​சம் முகங்​கள் அடங்​கிய தரவுத்​தளத்​தில் இருந்து 5 விநாடிகளுக்​குள் தேடப்​படும் நபர்​களை அடை​யாளம் காணும் வசதி​யும் ஏற்​படுத்​தப்பட உள்​ளது.

ஒவ்​வொரு மாநகரிலும் தனித்​தனி​யாக நவீன கட்​டுப்​பாட்டு அறை​கள் அமைக்​கப்பட உள்​ளன. அங்​குள்ள பெரிய காணொலி திரைகள் மூலம் அனைத்து கண்​காணிப்பு கேம​ராக்​களை​யும் ஒரே இடத்​தில் இருந்து காவல்​துறை​யினர் கண்​காணிக்க முடி​யும். இந்த மையங்​கள் காவல் கட்​டுப்​பாட்டு அறை​களு​டன் இணைக்​கப்பட உள்​ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply