ஒரே இரவில் நடக்கும் கதை ‘ஸ்டேஷன்’

Priya
793 Views
1 Min Read

‘காளிதாஸ் 2’, ‘டார்க்’ உள்​ளிட்ட திரைப்​படங்​களில் நடித்த அஜய் கார்த்தி, ‘ஹார்ட் பீட்’ இணை​யத் தொடரின் மூலம் கவனம் ஈர்த்த தீபா பாலு இணைந்து நடிக்​கும் படம் ‘ஸ்டேஷன்’. அறி​முக இயக்​குநர் மாறன் கார்த்​தி​கேயன் இயக்​கும் இப்​படத்​தில் ஏ. வெங்​கடேஷ், தினேஷ் பிர​பாகர், பாலஹாசன், ரமேஷ் திலக், ஜெய் கிருஷ்ணா, ரமா உள்​ளிட்ட பலர் முக்​கியக் கதாபாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர்.

இதை கேபி இன்​போடெயின்​மென்ட் சார்​பில் கே.தினேஷ் குமார் தயாரிக்​கிறார். அருண் ராஜ் இசை அமைக்​கும் இப்​படத்​துக்கு சுபாஸ் பாரதி ஒளிப்​ப​திவு செய்​கிறார்.

“காதல், குற்​றம், அதிரடி கலந்த த்​ரில்​லர் திரைப்​பட​மாக இது உரு​வாகி வரு​கிறது. ஒரே இர​வில் நடை​பெறும் கதைக்​களம். மொத்​தக் காட்​சிகளில் சுமார் 70 சதவீதம் போலீஸ் ஸ்டேஷனை மைய​மாகக் கொண்டே அமைந்​துள்​ளன. இதற்​காக, சென்​னை​யில் உள்ள திரைப்​படத் தொழில்​நுட்​பக் கல்​லூரி​ ஒன்றில் போலீஸ் ஸ்டேஷன் செட் அமைக்​கப்​பட்டு, படப்​பிடிப்பு நடை​பெற்று வரு​கிறது” என்று படக்​குழு தெரி​வித் ​துள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply