முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நிறைவு: 319 பதக்கங்களுடன் சென்னை முதலிடம்

Priya
757 Views
2 Min Read

முதல்வர் கோப்பை விளை​யாட்​டுப் போட்​டிகளில் 142 தங்​கம் உள்​பட 319 பதக்​கங்​களு​டன் முதலிடம் பிடித்த சென்னை அணி வீரர்​களுக்கு முதல்​வர் விஜய் கோப்பை, பதக்​கங்​களை வழங்கி பாராட்​டினார்.

தமிழகத்​தின் 38 மாவட்​டங்​களி​லும் பள்ளி, கல்​லூரி மாணவர்​கள், மாற்​றுத்​திறனாளி​கள், அரசு ஊழியர்​கள் மற்​றும் பொது​மக்​கள் என 5 பிரிவு​களின் கீழ் நடத்​தப்​பட்ட முதல்​வர் கோப்பை விளை​யாட்​டுப் போட்​டிகளில் மாநில அளவி​லான போட்​டிகள் கடந்த அக்.15-ம் தேதி தொடங்​கின.

சென்னை, செங்​கல்​பட்டு, கோவை, மதுரை உள்​ளிட்ட 10 மாவட்​டங்​களில் 32,603 வீரர், வீராங்​க​னைகளு​டன் விறு​விறுப்​பாக நடை​பெற்ற போட்​டிகள் நேற்று முன்​தினம் (அக்.28) நிறைவடைந்​தன.

இதில் 142 தங்​கம் உள்​பட 319 பதக்​கங்​களை குவித்து சென்னை மாவட்​டம் முதலிடத்​தைப் பிடித்​தது. செங்​கல்​பட்டு மாவட்​டம் 64 தங்​கம் உள்​பட 143 பதக்​கங்​களு​டன் இரண்​டாம் இடத்​தையும், கோவை மாவட்​டம் 27 தங்​கம் உள்​பட 118 பதக்​கங்​களு​டன் மூன்​றாம் இடத்​தையும் பிடித்​தன.

இதைத் தொடர்ந்து, முதல்​வர் கோப்பை விளை​யாட்​டுப் போட்​டிகளுக்​கான நிறைவு மற்​றும் பரிசளிப்பு விழா சென்னை ஜவஹர்​லால் நேரு உள்​விளை​யாட்​டரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

விழாவுக்கு தலைமை தாங்​கிய முதல்​வர் விஜய், போட்​டிகளில் முதல் மூன்று இடங்​களை பிடித்த வீரர், வீராங்​க​னைகள் மற்​றும் அணிகளுக்கு கோப்பை, பதக்​கங்​கள் மற்​றும் ரூ.38 கோடிக்​கான பரிசுத்​தொகைகளை வழங்கி பாராட்​டினார்.

மேலும், ஜப்​பானில் நடை​பெற்ற 5-வது ஆசிய பாரா விளை​யாட்​டுப் போட்​டிகளில் பதக்​கங்​கள் வென்று சாதனை படைத்த 9 விளை​யாட்டு வீரர், வீராங்​க​னைகளுக்கு ரூ.6.85 கோடி உயரிய ஊக்​கத்​தொகைகளுக்​கான காசோலைகளை வழங்​கினார்.

அப்​போது வீரர்​களிடம் கலந்​துரையாடி அவர்​களின் கோரிக்​கைகளை கேட்​டறிந்த முதல்​வர் விஜய்​யுடன், அவர்​களது குடும்​பத்​தினருடன் குழுப் புகைப்​படமும் எடுத்​துக்​கொண்​டனர்.

தொடர்ந்து நீர் விளை​யாட்​டுகளில் தமிழக வீரர்​கள் உல​கத் தரம் வாய்ந்த பயிற்​சிகளை பெறு​வதற்​காக ராம​நாத​புரம் பிரப்​பன்​வலசையில் ரூ.42.90 கோடி​யில் 7.18 ஏக்​கர் பரப்​பளவில் புதிதாக அமைக்​கப்​பட்​டுள்ள தமிழ்​நாடு ஒலிம்​பிக் நீர் விளை​யாட்டு அகாட​மியையும், சேலம் கருப்​பூர் அரசினர் பொறி​யியல் கல்​லூரி வளாகத்​தில் ரூ.20 கோடி​யில் உரு​வாக்​கப்​பட்​டுள்ள பல்​நோக்கு விளை​யாட்டு வளாகத்​தையும் முதல்​வர் விஜய் திறந்து வைத்​தார்.

முன்​னதாக விளை​யாட்​டுத் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா பேசுகை​யில், “‘ட்​ரீம்ஸ்’ ஒலிம்​பிக்ஸ் என்ற குறிக்​கோளு​டன் நடத்​தப்​பட்ட முதல்​வர் கோப்பை விளை​யாட்​டுப் போட்​டிகளில் இது​வரை இல்​லாத அளவில் முதல்​முறை​யாக 27.82 லட்​சம் பேர் பங்​கேற்க பதிவு செய்​திருந்​தனர்.

போட்​டிகளை நடத்​து​வதற்​காக ரூ.83.36 கோடி செல​விடப்​பட்​டுள்​ளது. இந்​தி​யாவிலேயே முதல்​வர் கோப்​பைக்கு அதிக நிதி ஒதுக்​கீடு செய்​தது நம் முதல்​வர் தான்.

ஒரே ஒரு ஒலிம்​பிக் பதக்​கம் வெல்​லுங்​கள். உல​கின் நம்​பர் ஒன் ஆக நீங்​கள் மாறும்​போது, ஒட்​டுமொத்த பொருளாதா​ர​மும், தமிழகமும் உங்​களை தேடி வரும். நாம் சாதா​ரண​மாக ஜெயிக்க கூடாது.

ஒரு வரலாற்றை உரு​வாக்க வேண்​டும்” என்று தெரி​வித்​தார். இந்​நிகழ்​வில் தலை​மைச் செயலர் எம்.சாய்​குமார், விளை​யாட்​டுத் துறை செயலர் சந்​தீப் நந்​தூரி, தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் உறுப்​பினர் செயலர் மேகநாத ரெட்டி, அதன் இணைத் தலை​வரும், மிஷன் ஒலிம்​பிக் திட்​டத்​தின் சிறப்பு அதி​காரி எஸ்பி மயில்​வாகணன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply