மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை | இடைத்தேர்தல் முடிவுகள்

Priya
1313 Views
2 Min Read

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மை நிலவரப்படி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக முன்னிலை வகிக்கிறது.

மதுராந்தகத்தில் 10000+ வாக்குகள் வித்தியாசத்திலும், தாராபுரத்தில் 6000+ வாக்குகள் வித்தியாசத்திலும் தவெக முன்னிலை வகிக்கிறது.

தாராபுரம் தொகுதியின் வாக்கு முன்னிலை நிலவரம் ஆரம்பத்திலிருந்தே சுவாரஸ்யமாகச் செல்கிறது. முதலில் தவெக முன்னிலை பின்னர் அதிமுக முன்னிலை எனத் தொடங்கி இடையில் அதிமுக முன்னிலை எனப் போக்குக் காட்டியது. பின்னர் மீண்டும் தவெக முன்னிலைக்கு வர அதிமுகவுடன் போட்டா போட்டி போக்கு உருவானது. இந்நிலையில், தற்போது திமுக இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மதுராந்தகம் முன்னிலை நிலவரம்:

தவெக – மரகதம் குமரவேல்: 31,117

திமுக – பரந்தாமன்: 20,701

அதிமுக – கனிதா சம்பத்: 17,995

சிபிஎம் – பி.சுகந்தி: 1051

நாதக – ஜானகிராமன்: 885

மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகி ராமன் (நாம் தமிழர்) மற்றும் சுயேச்சைகள் என 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மதுராந்தகத்தில் 86.26%, வாக்குகள் பதிவாகின. 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தாராபுரம் முன்னிலை நிலவரம்:

தவெக – சத்யபாமா: 34,987

திமுக – சுகன்யா: 28,567

அதிமுக – பானுமதி: 25,307

இந்திய கம்யூனிஸ்ட் – ப.லட்சுமணன் – 640

நாதக – கார்த்திகா – 2875

தாராபுரத்தில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தாராபுரத்தில் 80.25% வாக்குகள் பதிவாகின. அங்குள்ள 320 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், 14 மேசைகளில் 23 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன.

தட்டாஞ்சாவடியில் என்.ஆர் காங்கிரஸ் வெற்றி:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. 4 சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அசோக் ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார்.

என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 13,358 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இதனையடுத்து அங்கு என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4876 வாக்குகளுடன் காங்கிரஸ் வேட்பாளார் விநாயகம் 2-ம் இடம் பெற்றுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply