மாநகர பேருந்துகளுக்கு குத்தகை முறையில் நடத்துநரை நியமிக்கக்கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

Priya
800 Views
1 Min Read

மாநகர பேருந்​துகளுக்கு குத்தகை முறை​யில் நடத்​துநர்​களை நியமிக்​கக்​கூ​டாது என்று பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநகர போக்​கு​வரத்து கழக பேருந்​துகளில் பயணிப்​போருக்கு பேருந்து நிறுத்​தங்​களில் பயணச்​சீட்டு வழங்​கு​வதற்​காக 1,797 நடத்​துநர்​களை குத்​தகை முறை​யில் நியமிப்​ப​தற்​கான ஒப்​பந்​தம் உத்​தரபிரதேசத்தை சேர்ந்த எஸ்​.எஸ். என்​டர்​பிரைசஸ் நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது.

திமுக ஆட்​சி​யில் கோரப்​பட்ட ஒப்​பந்​தப்​புள்ளி அடிப்​படை​யில் தீர்​மானிக்​கப்​பட்ட ஒப்​பந்​தத்தை தவெக அரசு வழங்​கி​யிருப்​பது கண்​டிக்​கத்​தக்​கது. அவுட்​சோர்​சிங் எனப்​படும் குத்​தகை முறை நியமனங்​களை ஜனநாயகத்​தி​லும், சமூகநீ​தி​யிலும் அக்​கறை கொண்​டுள்ள எந்த அரசாலும் ஏற்​றுக்​கொள்ள முடி​யாது.

இந்த கொள்​கைகளில் தவெக அரசுக்கு நம்​பிக்கை இருந்​தால் மாநகர போக்​கு​வரத்து கழகம் மட்​டுமின்​றி, அனைத்து அரசுத் துறை​கள், பொதுத்​துறை நிறு​வனங்​கள் மற்​றும் உள்​ளாட்சி அமைப்​பு​களில் குத்​தகை முறை நியமனங்​களை ரத்து செய்​வ​தாக அறிவிக்க வேண்​டும்.

காலி​யாக உள்ள அனைத்து பணி​யிடங்​களை​யும் கால​முறை ஊதிய அடிப்​படை​யில் உடனே நிரப்ப வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

24 மணி நேரத்​தில் 5 கொலை

அன்​புமணி வெளி​யிட்ட மற்​றொரு அறிக்​கை​யில், “காஞ்​சிபுரம் மாவட்​டம் படுநெல்லி கிராமத்​தில் கோயில் திரு​விழா​வில் மது போதை​யால் ஏற்​பட்ட மோதல் காரண​மாக இரு இளைஞர்​கள் கொடூர​மாக வெட்​டிக் கொல்​லப்​பட்​டனர்.

அதே​போல், சிவகங்கை மாவட்​டம் கொந்​தகை கிராமத்​தில் 25 வயது இளைஞர் கழுத்தை அறுத்து படு​கொலை, கடலூர் மாவட்​டம் நெய்​வேலி​யில் நரேஷ்கு​மார் என்ற இளைஞர் வெட்​டிக்​கொலை, சென்னை தியாக​ராய நகர் அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் ராதா என்ற பெண் நகைக் காக கொலை என கடந்த 24 மணி நேரத்​தில் 5 பேர் படு​கொலை செய்​யப்​பட்​டிருப்​பது தமிழகத்​தின் சட்​டம் – ஒழுங்கு குறித்த கவலையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. எனவே, கொலைகள் உள்​ளிட்ட குற்​றச் செயல்​களை தடுத்து சட்​டம் – ஒழுங்கை பாது​காக்க வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply