கடன் மூலம் கறுப்பு பணம் வெள்ளையாகும் அபாயம்: வங்கிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வருமான வரி இயக்குநர் அறிவுறுத்தல்

Priya
6 Views
1 Min Read

கடன் கணக்​கு​களைப் பயன்​படுத்தி கறுப்​புப் பணத்தை வெள்​ளைப் பண​மாக மாற்​றும் முயற்​சிகள் நடை​பெற வாய்ப்​புள்​ள​தால் வங்​கி​கள் எச்​சரிக்​கையுடன் செயல்​பட வேண்​டும் என வரு​மான வரித்​துறை இயக்​குநர் ஜி.நந்​தகுமார் அறி​வுறுத்தி உள்​ளார்.

சென்னை வரு​மான வரித்​துறை​யின் நுண்​ணறிவு மற்​றும் குற்​றப் புலனாய்​வுப் பிரிவு சார்​பில், நகர்ப்​புற கூட்​டுறவு வங்​கி​களுக்​கான விழிப்​புணர்வு நிகழ்ச்சி சென்னை கீழ்ப்​பாக்​கத்​தில் உள்ள கூட்​டுறவுச் சங்​கங்​களின் பதிவாளர் அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

நிகழ்ச்​சிக்கு வரு​மான வரி நுண்​ணறிவு மற்​றும் குற்​றப் புலனாய்வு இயக்​குநர் ஜி.நந்​தகுமார் தலைமை தாங்​கினார். இந்​நிகழ்ச்​சி​யில் அவர் பேசிய​தாவது: வங்​கி​கள் மற்​றும் கூட்​டுறவு நிறு​வனங்​கள் நிதிப் பரிவர்த்​தனை அறிக்​கைகளை (எஸ்.எஃப்.டி.) உரிய காலத்​தில் பிழையின்​றித் தாக்​கல் செய்ய வேண்​டும்.

அறிக்​கைகளில் பிழைகள் இருந்​தால் அபராதம் உள்​ளிட்ட நட​வடிக்​கைகள் மேற்​கொள்ள சட்​டத்​தில் வழிவகை உள்​ளது.

சேமிப்​புக் கணக்​கு​களில் ரூ.10 லட்​சத்​துக்கு மேல் ரொக்​கப் பரிவர்த்​தனை நடை​பெறு​வதை மட்​டுமின்றி, கடன் கணக்​கு​கள் உள்​ளிட்ட பிற கணக்​கு​களி​லும் நடை​பெறும் சந்​தேகத்​துக்​குரிய பரிவர்த்​தனைகளைக் கண்​காணிக்க வேண்​டும்.

கடன் கணக்​கு​களைப் பயன்​படுத்தி கறுப்​புப் பணத்தை வெள்​ளைப் பண​மாக மாற்​றும் முயற்​சிகள் நடை​பெற வாய்ப்​புள்​ள​தால் வங்​கி​கள் கூடுதல் கவனத்​துடன் செயல்​பட வேண்​டும்.

கடந்த ஆண்டு வங்​கி​கள் மற்​றும் கூட்​டுறவு நிறு​வனங்​களில் 42 நேரடி ஆய்​வு​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. இந்த ஆண்​டும் ஆய்​வு​கள் நடத்​தத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

அடுத்த ஓரிரு வாரங்​களில் சில வங்​கி​களில் ஆய்வு மேற்​கொள்​ளப்​படலாம். எனவே, அதற்கு முன்​பாகவே அனைத்து அறிக்​கைகளை​யும் பிழையின்​றித் தாக்​கல் செய்ய வேண்​டும்.

அறிக்கைகள் தாக்​கல் செய்​வதில் ஏற்​படும் சந்​தேகங்​கள் மற்​றும் தொழில்​நுட்​பப் பிரச்​சினைகளுக்கு உதவ நாடு முழு​வதும் வரு​மான வரித்​துறை​யின் நோடல் அதி​காரி​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

வங்​கி​களுக்​குத் தேவை​யான பயிற்சி மற்​றும் தொழில்​நுட்ப உதவி​களை​யும் வழங்​கத் துறை தயாராக உள்​ளது. வங்​கி​களை அச்​சுறுத்​து​வது நோக்​கமல்ல.

நாட்​டின் நிதி அமைப்பை மேம்​படுத்​தவும், பணமோசடி மற்​றும் கறுப்​புப் பணப் புழக்​கத்​தைக் கட்​டுப்​படுத்​தவும் அனைத்து வங்​கி​களும் ஒத்​துழைக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply