சென்னையில் 18 மண்டலங்களில் இன்றும், நாளையும் தாயுமானவர் திட்டம்: கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அறிவிப்பு

Priya
43 Views
1 Min Read

தா​யு​மானவர் திட்டத்​தின் கீழ், சென்​னை​யில் 18 மண்​டலங்​களில் இன்றுமுதல் 2 நாட்​களுக்கு பயனாளி​களின் வீடு​களுக்கு சென்று ரேஷன் பொருட்​கள் விநியோகிக்​கப்பட உள்​ளது.

இது தொடர்​பாக, சென்னை மண்டல கூட்​டுறவுச் சங்​கங்​களின் கூடு​தல் பதி​வாளர் பாபு வெளி​யிட்ட செய்திக்குறிப்பு: முதியோர் மாற்றுத் திறனாளிகள் தமிழக முதல்​வரின் தாயுமானவர் திட்​டத்​தின் கீழ், 65 வயதுக்கு மேற்​பட்ட முதி​யோர் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​களின் இல்​லத்​துக்கே சென்று பொது விநி​யோகத்​திட்ட பொருள்​கள் விநி​யோகம் செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

இந்​நிலை​யில், ஜூன் 2 மற்​றும் 3 ஆகிய தேதி​களில் (இன்றும், நாளை​யும்) சென்​னை​யில் அண்​ணாநகர், ஆலந்தூர், பெருங்​குடி, சேழிங்​கநல்​லூர், தேனாம்​பேட்​டை, அடை​யாறு, திரு​வொற்​றியூர், மணலி, மாதவரம், தண்​டை​யார்​பேட்​டை, ராயபுரம், திரு.​வி.க.நகர், அம்​பத்​தூர், கோடம்​பாக்​கம், வளசர​வாக்​கம், பல்​லா​வரம், குரோம்​பேட்​டை, தாம்​பரம் ஆகிய 18 மண்​டலங்​களில் கூட்​டுறவுத் துறை​யின் கீழ் செயல்​பட்டு வரும் 990 ரேஷன் கடைகளின் விற்​பனை​யாளர்​கள், அத்​தி​யா​வசி​யப் பொருட்​களை வீடு தேடி விநி​யோகம் செய்ய உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

தாயுமானவர் திட்​டத்​தின் கீழ், பயன்​பெறும் முதி​யோர் மற்​றும் மாற்​றுத்​திற​னாளி​கள் இத்​திட்​டத்தை தவறாமல் பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும். இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply