சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதியில் ஆய்வு: மாணவர் குறைகளை கேட்டறிந்த முதல்வர் விஜய்

Priya
24 Views
1 Min Read

சை​தாப்​பேட்​டை​யில் உள்ள எம்​.சி. ராஜா சமூக நீதி மாணவர் விடு​தி​யில் முதல்​வர் விஜய் திடீர் ஆய்வு மேற்​கொண்டு மாணவர்​களிடம் அடிப்​படை வசதி மற்​றும் தேவை​கள் குறித்து கேட்​டறிந்​தார்.

சென்னை சைதாப்பேட்டையில் 10 தளங்​கள் மற்​றும் லிஃப்ட் வசதி​யுடன் ரூ.44 கோடி செல​வில் கடந்த ஆட்​சி​யில் எம்​.சி.​ராஜா மாணவர் விடுதி கட்​டப்​பட்​டது. பல்​வேறு கல்​லூரி​களில் படிக்​கும் ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின மாணவர்​கள் இங்கு தங்கி படித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், முதல்​வர் விஜய், தலை​மைச் செயல​கத்​தில் நேற்று பணி​களை முடித்​து​விட்டு திடீரென எம்​.சி.​ராஜா மாணவர் விடு​திக்கு சென்று ஆய்வு மேற்​கொண்​டார்.

அப்​போது, விடு​தி​யில் உள்ள அடிப்​படை வசதி​கள் குறித்​தும் மாணவர்​களுக்​கான தேவை​கள் குறித்​தும் கேட்​டறிந்​தார். முதல்​வரிடம் மாணவர்​கள் தங்​களின் கோரிக்​கைகளை தெரி​வித்​தனர்.

அதன்​மீது உடனடி நடவடிக்கை எடுக்​கப்​படும் என முதல்​வர் உறுதி அளித்​த​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இந்த ஆய்​வின்​போது, சமூக நீதித்​துறை அமைச்​சர் வன்​னியரசு மற்​றும் உயர் அதி​காரி​கள் உடனிருந்​தனர்.

ஏற்​கெனவே, முதல்​வர் விஜய் எழும்​பூர் அரசு மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் திடீர் ஆய்வு செய்​திருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply