விகிதாச்சார அடிப்படையில் நீர் திறப்பது குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அணுக தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Priya
712 Views
2 Min Read

காவிரி​யில் தமிழகத்​துக்​கான நீர் திறப்பை உறுதி செய்​யக் கோரிய வழக்​கு, உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் விக்ரம்நாத், சந்​தீப் மேத்தா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் மீண்டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்​கறிஞர் சி.எஸ்​.​வைத்​தி​ய​நாதன் ஆஜராகி, தமிழகத்​துக்கு விகி​தாச்​சார அடிப்​படை​யில் கிடைக்க வேண்​டிய காவிரி நீர் முழு​மை​யாக கிடைக்​க​வில்லை என தெரி​வித்​தார்.

அதற்கு நீதிப​தி​கள், காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் உத்​தர​வின்​படி, கர்​நாடகம் நீரை திறந்து விட்​டுள்​ள​தாக கூறுகிறது. நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பிக்​கப்​பட்​டுள்ள தரவு​களை பார்க்​கும்​போது, தற்​போதைய நிலை​யில் தமிழகத்​துக்கு நீர் வரு​வ​தில் பிரச்சினை இல்லை என்​பது தெரி​கிறது. அவ்​வாறு இருக்​கும்​போது நீர் வரவில்லை என எப்​படி கூறுகிறீர்​கள்? என கேள்வி எழுப்​பினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசுத் தரப்​பு, உச்ச நீதி​மன்ற தீர்ப்​பின்​படி, காவிரி நீர் மேலாண்மை ஆணை​யம் விகி​தாச்​சார அடிப்​படை​யில் நீர் திறக்க உத்​தர​விடு​வ​தில்​லை. இதன் காரண​மாகவே, தமிழகத்​துக்கு தற்​போது நீர் பற்​றாக்​குறை ஏற்​பட்​டுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டது.

அப்​போது நீதிப​தி​கள், இந்த விவ​காரம் தொடர்​பாக காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்தை அணுகி முறை​யிடு​வது​தானே சரி​யான நடை​முறை என தெரி​வித்​தனர். ஆனால் தமிழக அரசு தரப்​பில், செவ்​வாய்க்​கிழமை (இன்​று) காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்​டம் நடை​பெற உள்​ள​தாக​வும், அதில் தமிழகத்​தின் கோரிக்​கையை வலி​யுறுத்த உள்​ள​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டது.

மேலும், கர்​நாடக அணை​களில் 78 டிஎம்​சி-க்​கும் அதி​க​மாக நீர் இருந்​தும் தமிழகத்​துக்கு உரிய நீரை வழங்க மறுத்து வரு​வ​தாக​வும், எனவே, உச்ச நீதி​மன்​றத்​தால் தமிழகத்​துக்கு ஒதுக்​கப்​பட்ட நீரை கர்​நாடகம் திறந்து விடு​வதை உறுதி செய்ய வேண்​டும் என்று வலி​யுறுத்​தப்​பட்​டது இதையடுத்து நீதிப​தி​கள், அணை​களில் உரிய தண்​ணீர் இருந்​தும் தமிழகத்​துக்கு நீர் வழங்​கு​வ​தில் கர்​நாடகா​வுக்கு என்ன பிரச்​சினை? என கேள்வி எழுப்​பினர்.

அதற்கு கர்​நாடகா தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் ஷியாம் திவான் ஆஜராகி, இதுகுறித்து தரவு​களு​டன் உரிய விளக்கம் அளிப்​ப​தாக தெரி​வித்​தார். ஆனால் நீதிப​தி​கள், தற்​போது இரு மாநிலங்​களின் வாதங்​களை​யும் கேட்​கப் போவ​தில்லை என தெரி​வித்​ததோடு, தமிழக அரசு தங்​களது கூடு​தல் கோரிக்​கைகள் தொடர்​பாக காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தில் முறை​யிடலாம் என அறி​வுறுத்​தினர்.

மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணை​யம் தமிழகத்​தின் கோரிக்​கைகளை பரிசீலிக்​க​வில்லை என்​றால், மீண்​டும் உச்ச நீதி​மன்​றத்தை அணுகலாம் என தெரி​வித்​தனர். இதையடுத்​து, வழக்கை வரும் 31-ம் தேதிக்கு ஒத்​தி​வைத்த நீதிப​தி​கள், அது​வரையி​லான கால​கட்​டத்​தில் கர்​நாடகம் திறந்த நீரின் அளவு மற்றும் தமிழகத்​துக்கு கிடைக்​கப்​பெற்ற நீரின் அளவு உள்​ளிட்ட தரவு​களை அறிக்​கை​யாக நீதி​மன்​றத்​தில்​ தாக்​கல்​ செய்​ய உத்தரவிட்​டனர்​. 

Share This Article
Leave a Comment

Leave a Reply