வடபழனி முருகன் கோயிலில் செப்.1 முதல் செல்போனுக்கு தடை

Priya
598 Views
1 Min Read

சென்​னை​யின் பிரசித்​திபெற்ற ஆன்​மிகத் தலங்​களில் ஒன்​றான வடபழனி முரு​கன் கோயிலுக்​கு, தின​மும் நூற்​றுக்​கணக்​கான பக்​தர்​களும், செவ்​வாய்க்​கிழமை மற்​றும் விழா நாட்​களில் ஆயிரக்​கணக்​கானோரும் சுவாமி தரிசனம் செய்ய வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் கீழ் செயல்​படும் முக்​கியக் கோயில்​களில் புகைப்​படம் மற்​றும் வீடியோ எடுக்​க​வும், செல்​போன் பயன்​படுத்​த​வும் சமீபத்​தில் தடை விதிக்​கப்​பட்​டது. அதன்​தொடர்ச்​சி​யாக, வடபழனி முரு​கன் கோயி​லிலும் புதிய கட்​டுப்​பாடு​கள் அமலுக்கு வரவுள்​ளன.

அதன்​படி செப்​.1-ம் தேதி முதல், வடபழனி முரு​கன் கோயிலுக்​குள் பக்​தர்​கள் செல்​போன் கொண்டு செல்ல முழு​மை​யான தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

கோயிலுக்கு வரும் பக்​தர்​கள் தங்​களது செல்​போன்​களைத் தெற்கு கோபுரம் அருகே உள்ள பாது​காப்பு மையத்​தில் ஒப்​படைக்க வசதி செய்​யப்​பட்​டுள்​ளது.

அங்கு ரூ.5 கட்​ட​ணம் செலுத்தி டோக்​கன் பெற்​றுக்​கொள்ள வேண்​டும். தரிசனம் முடிந்​த​பின், டோக்​க​னைக் கொடுத்து செல்​போனை திரும்​பப் பெற்​றுக் கொள்​ளலாம்.

தடையை மீறி கோயிலுக்​குள் செல்​போன் கொண்டு சென்​றால், உடனடி​யாக செல்​போன் பறி​முதல் செய்​யப்​படு​வதோடு, அபராத​மும் விதிக்​கப்​படும். இந்த புதிய நடை​முறைக்​கு, பக்​தர்​கள் முழு ஒத்​துழைப்பு வழங்க வேண்​டும் எனத் கோயில்​ நிர்​வாகம்​ கேட்​டுக் ​கொண்​டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply