சென்னை அருகே செப்.11-ல் தேசிய கார் பந்தயம்

Priya
33 Views
1 Min Read

சென்னை டர்போ ரைடர்​ஸ், ஜேகே டயர் இணைந்து இந்​திய தேசிய கார் பந்தய சாம்​பியன்​ஷிப்பை அறி​முகம் செய்துள்​ளது. இதன் முதல் சுற்று கோவை​யில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்​வே​யில் வரும் செப்​டம்​பர் 11 முதல் 13 வரை நடை​பெறுகிறது.

தொடர்ந்து இதே பகு​தி​யில் 2-வது சுற்று அக்​டோபர் 23 முதல் 25 வரை நடத்​தப்​படு​கிறது. 3-வது சுற்று நவம்​பர் 13 முதல் 15 வரை பெங்​களூரு​விலும் இறு​திச் சுற்று டிசம்​பர் 11 முதல் 13 வரை சென்னைக்கு அரு​கிலுள்ள இருங்​காட்​டுக் கோட்​டை​யில் உள்ள மெட்​ராஸ் இன்​டர்​நேஷனல் சர்க்​யூட்​டில் நடை​பெறும் என போட்டி அமைப்​பாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர். போட்​டிகள் அனைத்​தும் நேரடி​யாக ஒளிபரப்பு செய்​யப்பட உள்​ளது.

தெற்கு ரயில்வே வெற்றி

சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளை​யாட்​டரங்​கில் தமிழ் ஹாக்கி லீக் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற ஆட்​டம் ஒன்​றில் தெற்கு ரயில்வே 3-2 என்ற கோல் கணக்​கில் இந்​தி​யன் வங்கி அணியை வீழ்த்தியது.

தெற்கு ரயில்வே அணி சார்​பில் சண்​முகம் 2 கோல்களும், கோபிந்த் படேல் ஒரு கோலும் அடித்​தனர். மற்​றொரு ஆட்​டத்​தில் எஸ்​டிஏடி 4-2 என்ற கோல் கணக்​கில் வரு​மானவரித் துறை அணியை தோற்​கடித்​தது. எஸ்​டிஏடி அணி தரப்​பில் கிருஷ்ணன் 2 கோல்​களும் கவுதம், அரவிந்த் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்​தனர்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply