சாலைகள் சாகசத்துக்கு அல்ல; பயணத்துக்கே: மாணவர்களுக்கு காவல் ஆணையர் அமல்ராஜ் அறிவுரை

Priya
159 Views
2 Min Read

சாலைகள் சாகசத்​துக்கு அல்ல, பாது​காப்​பான பயணத்​துக்கே என காவல் ஆணை​யர் அமல்​ராஜ் மாணவர்​களுக்கு அறி​வுரை வழங்​கி​னார். சென்​னை​யில் வாக​னங்​களின் எண்​ணிக்கை தொடர்ந்து அதி​கரித்து வரும் நிலை​யில், சாலைப் பாது​காப்பு குறித்த விழிப்​புணர்வை ஏற்​படுத்​தும் நோக்​கில் சென்னை பெருநகர போக்​கு​வரத்து காவல்​துறை சார்​பில் பிராட்வே ராஜா அண்​ணா​மலை மன்​றத்​தில் நேற்று விழிப்​புணர்வு நிகழ்ச்சி நடத்​தப்​பட்​டது.

இதில் காவல் ஆணை​யர் அமல்​ராஜ் கலந்​து​கொண்​டு, விபத்​தின்​போது பொன்​னான நேரத்​தில் (Golden Hour) காயமடைந்​தவர்​களை மீட்டு உயிர் காப்​பாற்​றிய காவலர்​கள், ஆம்​புலன்ஸ் டிரைவர்​கள், செவிலியர்​கள், ஆட்டோ டிரைவர்​கள், மாணவர்​கள் மற்​றும் பொது​மக்​களுக்கு சான்​றிதழ்​களை வழங்கி பாராட்​டி​னார்.

பின்​னர் அவர் பேசி​ய​தாவது: விபத்​துகளை குறைக்க காவல்​துறை பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. இதனால் விபத்​துகள் குறைந்​துள்​ளன. என்​றாலும், அவற்றை முழு​மை​யாகத் தடுக்க விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகள் தொடர்ந்து நடத்​தப்​பட்டு வரு​கின்​றன.

18 வயதுக்கு குறை​வான சிறு​வர்​களை பைக் உள்​ளிட்ட வாக​னங்​கள் ஓட்ட பெற்​றோர்​கள் அனு​ம​திக்​கக் கூடாது. அதை​யும் மீறி ஓட்டி விபத்து ஏற்​பட்​டால் வழக்​கில் சிறு​வர்​களுக்கு வாக​னத்தை வழங்​கிய பெற்​றோர் மீதும் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் சென்​னை​யில் 2,206 சாலை விபத்​துகள் பதி​வாகி, 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​ததுடன், 280 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். சாலைகள் சாகசம் செய்​வதற்​கான இடமல்ல, பாது​காப்​பாக பயணிக்க வேண்​டிய வழித்​தடம் என்​பதை மாணவர்​கள்உட்பட அனை​வரும் உணர வேண்​டும்.

பைக்கை ஓட்​டிச் செல்​வோரும், பின்​னால் அமருபவரும் கட்​டா​யம் தலைக்​கவசம் அணிய வேண்​டும். விபத்​தில் காயமடைந்​தவர்​களுக்கு உடனடி​யாக உதவி செய்து போலீ​ஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்​டும். இவ்​வாறு காவல் ஆணை​யர் அமல்​ராஜ் பேசி​னார்.

நிகழ்ச்​சி​யில் சாலைப் பாது​காப்பு குறித்த கலைநிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. `நீயா நானா’ கோபி​நாத் விழிப்​புணர்வு உரை​யாற்​றி​னார். பள்ளி மாணவர்​களுக்கு தலைக்​கவசங்​கள் வழங்​கப்​பட்​டதுடன், இறு​தி​யில் `சாலை விதி​களை மதிப்​போம்’ என்ற உறு​தி​மொழியை 800-க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் மற்​றும் காவல் துறை​யினர் ஏற்​றனர்.

நிகழ்ச்​சி​யில் போக்​கு​வரத்து கூடு​தல் காவல் ஆணை​யர் சா​முண்​டீஸ்​வரி, இணை ஆணை​யர் பகல​வன், துணை ஆணை​யர்​கள் பாலாஜி, மேகலீ​னா ஐடன்​, முத்​துக்​கு​மார்​ உட்​பட பலர்​ கலந்​து​கொண்​டனர்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply