மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடர்: நமன் திர், அகிப் நபிக்கு வாய்ப்பு

Priya
700 Views
1 Min Read

மேற்கு இந்தியத் தீவுகள் அணி இம்மாத இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

ஒருநாள் போட்டி தொடர் செப்டம்பர் 27-ல் தொடங்குகிறது. டி20 தொடர் அக்டோபர் 6 முதல் 17 வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

ஒருநாள் போட்டிக்கான அணியில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் நமன் திர், வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபி சேர்க்கப்பட்டுள்ளனர். சீனியர் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். அதேவேளையில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவுக்கு இரு தொடர்களிலும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் ஆகியோர் தேர்வாகவில்லை.

ஒருநாள் அணி

ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், துருவ் ஜூரெல், நமன் திர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், முகமது சிராஜ், அகிப் நபி.

டி20 அணி

ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், திலக் வர்மா, ஷிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ்.

Share This Article
Leave a Comment

Leave a Reply