“மே 20-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும். 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 4-ஆம் தேதியும், 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்” என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்கள் அமைச்சர் ராஜ்மோகன் கூறியது: “ கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஏற்கெனவே திட்டமிட்டபடி மே 20-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும்.
1 முதல் 3-ஆம் வகுப்பு வரை இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் ஆகிறது. ஜூன் 1 முதல் புதிய பாடத்திட்டம் தொடர்பாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, புதிய பாடத் திட்டத்தின்படி வடிவமைக்கப்பட்ட புத்தகங்களை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

