கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி நீரை தவெக அரசு பெற்றுத்தர வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

Priya
18 Views
2 Min Read

மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்திருப்பதாகவும், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி நீரை தவெக அரசு பெற்றுத்தர வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளனர்.

இவ்விவகாரத்தில், மேட்டூர் அணையில் இருந்து நீரை திறப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மேட்டூர் அணை திறக்கப்படாத தால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான நிலத்தயாரிப்பு பணிகள் முடங்கியுள்ளன. எனவே தமிழக அரசு உடனடியாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி நீரை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: மின்வெட்டால் நெற்பயிர் களுக்கு உரிய நேரத்தில் போதிய நீரை பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகி வருகின்றன. இந்நிலையில் தவெக அரசு அறிவித்துள்ள 18 மணி நேர தடையில்லா மின்சார வழங்கல் அறிவிப்பை எவ்வாறு நம்புவது?

திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன்:

தமிழகத்தில் ஆண்டு தோறும் ஜூன் 12 மேட்டூர் அணைதிறக்கப்படும் நடைமுறையைக் கூட கடைபிடிக்கமுடியாமல் தோற்றுப்போயிருக்கும் இந்தஅனுபவமில்லாத அரசு, வெற்று அறிவிப்பாக வெளியிட்டிருக்கும் குறுவை தொகுப்பு மற்றும் மும்முனை மின்சார அறிவிப்பு என்பது அடுப்பை பற்றவைக்காமலேயே சமைப்பதுபோல் உள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி: மேட்டூர் அணையை திறக்கப்படாத நிலையில், விவசாயிகளுக்கு தமிழக அரசு குறுவை சிறப்பு திட்ட நிதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

அதேநேரம் கைநடவு மற்றும் இதர சாகுபடி பணிகளுக்குமான தொகையாக மானியத்தை கூடுதலாக வழங்குவதுடன், காவிரி நீர் கிடைக்காததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மூலம் கிடைக்கும் முழு வருமானத்தை இழந்துள்ள விவசாயிகளுக்கு நிவாரண தொகையையும் அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

மேலும், பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தவாக தலைவர் தி.வேல்முருகன், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து ஆகியோரும் காவிரி நீரை பெற்றுத் தர தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply