காணொலிக் காட்சி வாயிலாக உதயநிதி தலைமையில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

Priya
581 Views
1 Min Read

​தி​முக எம்​எல்​ஏக்​கள் கூட்​டம் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் தலை​மை​யில் காணொலிக் காட்சி வாயி​லாக இன்​று (ஜூலை 28) நடை​பெற உள்​ளது, தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்​றி​பெற்று ஆட்​சி​யமைத்​துள்ள தவெக​வின் முதல் பொது பட்​ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதி​யும், வேளாண் பட்​ஜெட் மே 6-ம் தேதி​யும் வெளி​யிடப்பட உள்​ளது.

இதற்​கான முன்​னேற்​பாடு​கள் தற்​போது தீவிர​மாக மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இந்​நிலை​யில், பட்​ஜெட் கூட்​டத்​தொடரில் பங்​கேற்​பது தொடர்​பான திமுக எம்​எல்​ஏக்​கள் கூட்​டம் இன்று (ஜூலை 28) மாலை 5 மணி​யள​வில் நடை​பெற உள்​ள​தாக அறி​விப்பு வெளி​யாகி​யுள்​ளது.

இதுகுறித்து திமுக கொறாடா எ.வ.வேலு வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘‘எ​திர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் தலை​மை​யில் பட்​ஜெட் தொடர்​பான திமுக எம்​எல்​ஏக்​கள் கூட்​டம் இன்று மாலை 5 மணி​யள​வில் காணொலிக் காட்சி வாயி​லாக நடை​பெறவுள்​ளது.

இதில் எம்​எல்​ஏக்​கள் தவறாமல் பங்​கேற்க வேண்​டும்​’’என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​கிடையே, இந்த அறி​விப்​பானது அரசி​யல் வட்​டாரத்​தில் பேசுப்​பொருளாகி​யுள்​ளது.

ஏனெனில், திமுக வரலாற்​றில் எம்​எல்​ஏக்​கள் கூட்​டம் முதல்​ முறை​யாக கட்​சி​யின் தலை​வர் தலை​மை​யின்றி நடத்​தப்​பட​வுள்​ளது. இதற்கு முந்​தைய எம்​எல்ஏ கூட்​டங்​கள் பெரும்​பாலும் கட்​சித் தலை​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில்​தான் நடை​பெறும்.

கூட்​டத்​துக்​கான அழைப்​பும் வழக்​க​மாக பொதுச்​செய​லா​ளர் துரை​முரு​கன் பெயரில்​தான் விடுக்​கப்​படும். ஆனால், நேற்​றைய அறி​விப்பை கொறாடா எவ.வேலு வெளி​யிட்​டிருந்​தார்.

இதன்​மூலம் சட்​டப்​பேரவை நிகழ்​வு​களை ஒருங்​கிணத்து வழிநடத்​தும் பணி​களை உதயநிதி ஸ்டா​லின் முழு​மை​யாக தன் கைவசப்​படுத்​தி​ய​தாக அறி​வாலய வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

Share This Article
Leave a Comment

Leave a Reply