தொழிலாளர் நலனிலும் முன்னணி மாநிலமாக்குவோம்: அமைச்சர் முகமது பர்வேஸ் அழைப்பு

Priya
745 Views
1 Min Read

தொழிலாளர் நலனிலும் முன்னணி மாநிலமாக்குவோம்: அமைச்சர் முகமது பர்வேஸ் அழைப்பு

தொழில் வளர்ச்​சி​யில் மட்​டுமல்ல, தொழிலா​ளர் நலனிலும் தமிழகத்தை முன்​னணி மாநில​மாக்​கு​வோம் என தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சர் முகமது பர்​வேஸ் அழைப்பு விடுத்​தார்.

தமிழ்​நாடு தொழிலா​ளர் கல்வி நிலை​யம் மற்​றும் சர்​வ​தேச தொழிலா​ளர் அமைப்​பின் (ஐஎல்ஓ) சார்​பில், ‘சமூக உரை​யாடல், பணி​யிட ஒத்​துழைப்பு மற்​றும் குறைதீர் நடை​முறை​கள்’ என்ற தலைப்​பிலான ஒரு நாள் பயிற்சி கருத்​தரங்​கம் சென்​னை​யில் நேற்று நடந்​தது.

இக்​கருத்​தரங்கை தொழிலா​ளர் நலன் மற்​றும் திறன் மேம்​பாட்​டுத் துறை அமைச்​சர் முகமது பர்​வேஸ் தொடங்கி வைத்து பேசி​ய​தாவது: தமிழகத்​தின் முன்​னேற்​றத்​துக்கு அடித்​தள​மாக திகழ்​பவர்​கள் தொழிலாளர்கள்.

அந்த வகை​யில், தொழிலா​ளரின் குரலாக நின்​று, இந்த கருத்​தரங்கை தொடங்கி வைப்​ப​தில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக முதல்​வர் விஜய் தலை​மையி​லான ஆட்​சி, ஒவ்​வொரு தொழிலா​ள​ரும் பாது​காப்​பாக​வும், மதிப்​புடன் நடத்​தப்​படு​பவ​ராக​வும், முன்​னேறும் வாய்ப்பை பெறு​பவ​ராக​வும் இருக்​கும்.

வெற்றி தமிழகத்தை உரு​வாக்​கும் நோக்​கில் உறு​தி​யாக செயல்​பட்டு வரு​கிறோம். இந்​தி​யா​வில் தொழில் வளர்ச்​சி​யில் மட்​டுமல்​லாமல், தொழிலா​ளர் நலனிலும் நாட்​டுக்கே முன்​மா​திரி​யாகத் திகழும் மாநில​மாக தமிழகத்தை உரு​வாக்​கு​வோம். இவ்​வாறு அமைச்​சர் முகமது பர்​வேஸ் பேசி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில், தொழிலா​ளர் நலன் மற்​றும் திறன் மேம்​பாட்​டுத் துறை செயலர் கொ. வீர​ராகவ ராவ், தொழிலா​ளர் நல ஆணை​யர் மா.வள்​ளலார், தொழிலக பாது​காப்பு மற்​றும் சுகா​தார இயக்கக இயக்​குநர் செ.ஆனந்த், சர்​வ​தேச தொழிலா​ளர் அமைப்​பின் (ஐஎல்ஓ) இயக்​குநர் மியாமோட்டோ மிச்​சிக்​கோ, தேசிய திட்ட ஒருங்​கிணைப்​பாளர் பல்​லவி மான்​சிங், முது​நிலை திட்ட அலு​வலர் திவ்யா வர்​மா, தமிழ்​நாடு தொழிலா​ளர் கல்வி நிலைய இயக்​குநர் ஆர்​.செந்​தில் குமாரி, இணை இயக்​குநர்​கள் பெ.சுப்​ரமணி​யன், மு.​வி. கார்த்​தி​கேயன் ஆகியோ​ர் பேசினர்.

மனிதவளத் துறை வல்​லுநர்​கள், நலப்​பணி அதி​காரி​கள், தொழிலா​ளர் நலத்துறை அதி​காரி​கள், மின்​னணு​வியல் உற்​பத்​தித்​ துறை அலு​வலர்​கள்​ பங்​கேற்​றனர்​. 

Share This Article
Leave a Comment

Leave a Reply