முதல்வராக விஜய் பதவியேற்ற 13 நாட்களில் 30-க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்கள்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

Priya
6 Views
1 Min Read

முதல்​வ​ராக விஜய் பதவி ஏற்ற 13 நாட்​களில் தமிழகத்​தில் 30-க்​கும் மேற்​பட்ட குற்​றச்​சம்​பவங்​கள் நடந்​துள்​ள​தாக பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் விமர்​சித்​துள்​ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பதி​வில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: தூயசக்​தியா அல்​லது தூங்​கும் சக்​தி​யா? திமுக எனும் தீயசக்​திக்கு மாற்​றான தூயசக்தி நாங்​கள் தான் என்று கூறிய விஜய் தமிழகத்​தின் முதல்​வ​ராக பதவி​யேற்ற 13 நாட்​களில் கொலை, பாலியல் குற்​றம், கடத்​தல், ரவுடி​யிசம், வன்​முறை என கிட்​டதட்ட 30-க்கும் அதி​க​மான குற்​றங்​கள் நடந்​துள்​ளதை தினசரி செய்​தித்​தாள்​கள் வெளிச்​சம் போட்​டுக் காட்​டு​கின்​றன

முந்​தைய திமுக ஆட்​சி​யில் தான் மக்​கள் உயிர் பயத்​துடன் ஒவ்​வொரு நாளை​யும் கழித்​தார்​கள் என்று பார்த்​தால், தற்​போதைய தவெக ஆட்​சி​யிலும் மக்​களின் பாது​காப்பு அந்​தரத்​தில்தான் ஊசலாடிக் கொண்​டிருக்​கிறது.

அதுசரி, திருடன் கையில் சாவி கொடுத்​ததைப் போல, குற்​ற​வாளி​களை எல்​லாம் அமைச்​சர் பதவி​யில் அமர்த்​தி​னால் குற்​றங்​கள் எப்​படி குறை​யும்? அரசைக் கண்டு குற்​ற​வாளி​களுக்கு எப்​படி பயமிருக்​கும்? ஆட்​சிக்கு வந்​தவுடன் மாநிலத்​தின் சட்​டம் ஒழுங்கை சரிசெய்​து, மக்​களின் பாது​காப்பை உறுதி செய்​வதை விட்​டு​விட்​டு, வித வித​மான விளம்​பரப் பரப்​புரைகளி​லேயே முதல்​வர் கவனம் செலுத்​திக் கொண்​டிருப்​பது அவரது அனுபவ​மற்ற ஆளு​மை​யைத்தான் காட்​டு​கிறது.

அலு​வல் பணி​களுக்கு வேண்​டு​மா​னால் கொஞ்ச காலம் அவகாசம் கோரலாம். ஆனால் சட்டம் ஒழுங்கு போன்ற அத்​தி​யா​வசி​யப் பணி​களுக்கு அவசரக​தி​யில் துடிப்​புடன் செயல்பட வேண்​டும் என்​பதை முதல்​வர் எப்​போது​தான்​ உணர்​வார்​? இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது

Share This Article
Leave a Comment

Leave a Reply