நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவுக்காக 45 கிலோ சந்தனக்கட்டை இலவசமாக வழங்க அரசாணை

Priya
614 Views
1 Min Read

நாகூர் தர்கா சந்​தனக்​கூடு திரு​விழாவுக்​காக 45 கிலோ சந்​தனக்​கட்​டைகளை இல​வச​மாக வழங்​கும் அரசாணையை நாகூர் தர்கா அறங்​காவலர்​களிடம் முதல்​வர் விஜய் நேற்று வழங்​கினார்.

நாகூர் தர்கா பெரிய ஆண்​ட​வர் கந்​தூரி சந்​தனக்​கூடு திரு​விழா ஒவ்​வொரு ஆண்​டும் வெகு​விமரிசையாக நடத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த ஆண்​டுக்​கான புகழ்​பெற்ற நாகூர் தர்கா சந்​தனக்​கூடு திரு​விழா வரும் நவ.10-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது.

விழா​வின் முக்​கிய நிகழ்​வாகச் சந்​தனக் கூடுகள் ஊர்​வலமாக எடுத்​துச் செல்​லப்​படும் ஊர்​வலமாகக் கொண்டு வரப்​படும் சந்​தனம் ஆண்​ட​வரின் புனித சமாதி​யில் பூசப்​பட்டு சிறப்பு வழிபாடு நடத்​தப்​படு​கிறது. இவ்​விழா​வில் மத வேறு​பாடின்றி லட்​சக்​கணக்​கான மக்​கள் கலந்து கொள்​வர்.

இவ்​விழாவுக்கு தேவை​யான சந்​தன கட்​டைகளை வழங்​குமாறு தர்கா நிர்​வாகம் சார்​பில் அரசிடம் கோரப்​பட்​டது. அதைத் தொடர்ந்து 45 கிலோ 2-ம் தர சந்​தனக் கட்​டைகளை இல​வச​மாக வழங்​குமாறு வனத்​துறை தலை​வர், அரசுக்கு பரிந்​துரை செய்​தார். அதை கவனமுடன் பரிசீலித்த சுற்​றுச்​சூழல் மற்​றும் வனத்​துறை செயலர் காகர்லா உஷா, 45 கிலோ சந்​தனக்​கட்​டைகளை தர்கா நிர்​வாகத்​துக்கு வழங்க உத்​தர​விட்​டார்.

இந்த சந்​தனக்​கட்​டைகளை, இந்​நிகழ்​வுக்கு மட்​டுமே பயன்​படுத்த வேண்​டும் என்ற நிபந்​தனையை அரசு விதித்​துள்​ளது. இந்த அரசாணையை முதல்​வர் விஜய் நாகூர் தர்கா தலைமை அறங்​காவலர் எச்.ஹாஜா நஜிமுதீனிடம் வழங்​கினார். அப்​போது சிறு​பான்மை நலத்​துறை அமைச்​சர் அ.மு.ஷாஜகான், தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சர் ஜா.முகமது பர்​வேஸ், வனத்​துறை அமைச்​சர் ஆர்.வீ.ரஞ்​சித்​குமார், தமிழ்​நாடு வக்ஃப் வாரிய தலை​வர் கே.நவாஸ் கனி ஆகியோர் உடனிருந்​தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply