ரேஷன் கடைகளிலும் சன்ன ரக அரிசி விநியோகிக்க நடவடிக்கை: அமைச்சர் வெங்கடரமணன் தகவல்

Priya
746 Views
1 Min Read

ரேஷன் கடைகளி​லும் சன்ன ரக அரிசி விநி​யோகிக்க நடவடிக்கை எடுக்​கப்​படும் என மாநில உணவுத் துறை அமைச்​சர் வெங்​கடரமணன் தெரி​வித்​தார்.

புதுக்​கோட்டை மாவட்​டம் துளை​யானூர், கொன்​னையூரில் கட்​டப்​பட்ட உணவுப் பொருள் சேமிப்பு வட்ட செயல்​முறை கிடங்கை அமைச்​சர் வெங்​கடரமணன் நேற்று திறந்து வைத்​தார். அப்​போது, மாநில தொழி​லா​ளர் நலத் துறை அமைச்​சர் ஜெ.​முகமது பர்​வேஸ், ஆட்​சி​யர் எம்​.அருணா ஆகி​யோர் உடனிருந்​தனர்.

முன்​ன​தாக, செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் வெங்​கடரமணன் கூறியது: கர்​நாட​கா, தெலங்​கானா ஆகிய மாநிலங்​களில் மழைப்​பொழிவு குறைந்​த​தால், அங்​கிருந்து தமி​ழ​கத்​துக்கு அரிசி வரத்து குறைந்​தது. நவம்​பர் மாதத்​துக்​குள் அரிசி வரத்து அதி​கரிக்​கும். இதனால், விலை​யும் கட்​டுக்​குள் வரும். அரிசி விலை​யைக் கட்​டுப்​படுத்​தும் நோக்​கில், கூட்​டுறவு அங்​காடிகளில் சன்ன ரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்​பனை செய்​யப்​பட்டு வரு​கிறது.

வருங்​காலங்​களில் ரேஷன் கடைகளில் மோட்டா ரக அரிசி​யின் விநி​யோகத்​தைக் குறைத்​து, சன்ன ரக அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்​கப்​படும்.

அரிசி விலை உயர்​வுக்கு வரத்து குறை​வும், பதுக்​கலும் முக்​கியக் காரணங்​களாக உள்​ளன. எனவே, கர்​நாட​கா, கேரளம் உள்​ளிட்ட மாநிலங்​களின் எல்​லைப் பகு​தி​களில் ரேஷன் அரிசிக் கடத்​தலைத் தடுக்க நடவடிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இவ்​வாறு கூறி​னார்.

மேலும் 25 ஆயிரம் டன் அரிசி

திருச்சி விமான நிலை​யத்​தில் கூறும் ​போது, ‘கூட்​டுறவு அங்​காடிகளில் கிலோ ரூ.30-க்​கும் விற்​கப்​படும் சன்ன ரக அரிசிக்கு மக்​களிடம் வரவேற்பு கிடைத்துள்​ள​தால், மேலும் 25 ஆயிரம் டன் அரிசி விநி​யோகிக்க விற்​பனைக்கு வழங்​கப்பட உள்​ளது. இதனால் இனி வரும் காலங்​களில் அரிசி உட்பட அத்​தி​யா​வசிய பொருட்​கள் விலை உயர்​வு விரை​வில்​ குறை​யும்​’ என்​றார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply