சம்பா நெற்பயிர் காப்பீட்டு காலவரம்பு டிச.1 வரை நீட்டிப்பு: அமைச்சர் ஆர்.வினோத் தகவல்

Priya
895 Views
1 Min Read

தமிழக வேளாண் துறை அமைச்​சர் ஆர்.வினோத் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: நடப்​பாண்​டில் (2026-2027) நில​வும் எல் – நினோ நிகழ்​வின் தாக்​கத்​தால், தென்​மேற்கு பரு​வ​மழை குறைவாகப் பெறப்​பட்​டது.

இதன் காரண​மாக முக்​கிய அணைகளில் போதிய நீர் இருப்பு மற்​றும் நீர்​வரத்து இல்​லாத நிலை ஏற்​பட்​டது.

எனினும், ஆகஸ்ட் மாத இறுதி​யில் மேட்​டூர் அணை​யில் போது​மான நீர் வரத்து இருந்​ததால், செப்.1-ம் தேதி முதல் சம்பா நெல் சாகுபடிக்​குத் தேவை​யான பாசன வசதியை உறுதி செய்ய முதல்​வர் விஜய் மேட்​டூர் அணை​யைத் திறந்து வைத்​தார்.

மேலும், வடகிழக்​குப் பருவ மழை அக்.15-ம் தேதி முதல் பரவலாகப் பெய்து வரு​வ​தால், இயல்​பாக ஆகஸ்ட் 2-ம் வாரத்​தில் இருந்து மேற்​கொள்​ளப்​படும் சம்பா நெல் சாகுபடியை விவசாயிகள் செப்​டம்​பர் இறுதி​யில் இருந்​து​தான் முழு வீச்​சில் மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், மத்​திய அரசின் தேசிய பயிர் காப்​பீட்டு வலை​தளத்​திலும் விவசாயிகள் உரிய காலத்​துக்​குள் எளிதாக காப்​பீடு செய்ய இய​லாத நிலை ஏற்​பட்​டது.

இத்​தகைய சூழ்​நிலை​யில், பெரும்​பாலான மாவட்​டங்​களில் சம்பா நெற்​பயிர் சாகுபடி தாமத​மாக மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வதைக் கருத்​தில் கொண்டு, 2026-2027 சம்பா பருவ காப்​பீட்​டுக்​கான காலக் கெடுவை நீட்​டிக்​குமாறு விவசாயிகள் அரசிடம் கோரிக்கை விடுத்​தனர்.

அதையேற்று, தமிழக அரசால் எடுக்​கப்​பட்ட முயற்​சி​யால் சம்பா, தாளடி, பிசானம் நெற்​பயிர்க் காப்​பீட்​டுக்​கான கடைசி தேதியை டிச.1-ம் தேதி வரை நீட்​டித்து மத்​திய அரசு ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளது.

எனவே, டிசம்​பர் 1-ம் தேதிக்​குள் இது​வரை சம்பா நெற்​பயிரை காப்​பீடு செய்​யாத விவசாயிகள் உரிய ஆவணங்​களு​டன் பதிவு செய்து பயனடைய​லாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply