தேர்தல் ஆதாயத்துக்காக காவிரி விவகாரத்தில் வரலாற்றுரீதியாக உணர்ச்சிகளை தூண்டிவிட்டதே காங்கிரஸ்தான்: நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு

Priya
55 Views
1 Min Read

‘பாஜக மாநில தலைமை செய்தி தொடர்​பாளர் நாராயணன் திருப்​பதி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: காவிரிப் பிரச்​சினையை ஒரு முடி​வில்​லாத வாக்கு வங்கி நாடக​மாக மாற்​றிய​தில் காங்​கிரஸ்​தான் மிகப்​பெரிய குற்​ற​வாளி என்​பது வரலாறு அறிந்த உண்​மை.

காவிரி நீர் தகராறு என்​பது உச்ச நீதி​மன்​றத் தீர்ப்​பு​கள், காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் உத்​தர​வு​கள் மற்​றும் எதார்த்​த​மான நீரியல் சூழல்​களுக்கு உட்​பட்ட இரு மாநிலங்​களுக்கு இடையி​லான நீண்​ட​காலப் பிரச்​சினை.

குறிப்​பாக, போதிய மழை​யின்மை மற்​றும் அணை​களில் நீர் இருப்பு குறை​வாக இருக்​கும் இக்​கட்​டான காலங்​களில் இது மிக​வும் சவாலானது. இதை உணராமல், பிரதமர் ஏதோ வேண்​டுமென்றே வன்​மத்​துடன் நீரைத் தடுத்து வைத்​திருப்​ப​தைப்​போல, ‘உடனடி​யாகத் தண்​ணீர் திறக்க வேண்​டும்’ என்று மாணிக்​கம் தாகூர் முழக்​கமிடு​வது உணர்ச்​சிகளைத் தூண்​டி​விடும் மலி​வான அரசி​யல்.

கர்​நாடகா, தமிழகம் ஆகிய இரு மாநிலங்​களி​லும் காங்​கிரஸ் ஆட்​சி​யில் இருந்​த​போது, இந்​தப் பிரச்​சினைக்​குத் தீர்வு காண தாகூரின் இந்த ஆவேசம் எங்கே போனது? இன்று தமிழகம் மற்​றும் கர்​நாடகா ஆகிய இரு மாநிலங்​களி​லும் காங்​கிரஸ் சிக்​கிக் கொண்டு தவிக்​கிறது.

மேகே​தாட்டு விவ​காரத்​தில் தங்​கள் சொந்​தக் கட்​சித் தலை​வர்​களின் நிலைப்​பாட்​டையே எதிர்க்க முடி​யாமல், முரண்​பட்ட அறிக்​கைகளை வெளி​யிட்​டுத் தன்​னைத்​தானே சிதைத்​துக் கொள்​கிறது காங்​கிரஸ்.

தேர்தல் ஆதா​யத்​துக்​காக காவிரி விவ​காரத்​தில் வரலாற்​றுரீ​தி​யாக உணர்ச்​சிகளைத் தூண்​டி​விட்​டது காங்​கிரஸ்​தான். தமிழகத்​தின் குறுவை சாகுபடி மிக முக்​கிய​மானது.

எனவே பிரதமரைத் திட்​டு​வதை விட்​டு​விட்​டு, நிலை​யான நீர் மேலாண்​மை, நவீன பாசன முறை​கள் மற்​றும் மாநிலங்​களுக்கு இடையி​லான ஒத்​துழைப்பு போன்ற ஆக்​கப்​பூர்​வ​மான பணி​களில் கவனம் செலுத்​துங்​கள்.

நதி​களை அரசி​ய​லாக்​கும் உங்​கள் கட்​சி​யின் வரலாறு, தமிழக விவ​சா​யிகளுக்​குப் பெரும் பா​திப்​பையே ஏற்​படுத்​தி​யுள்​ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply