பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் 15,000 போலீஸார் குவிப்பு

Priya
733 Views
2 Min Read

பிரதமர் நரேந்​திர மோடி நாளை (அக்.11) சென்னை வரு​கி​றார்.

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்​டப்​ பணி​களின் ஒரு பகு​தியாக நிறைவடைந்​துள்ள பூந்​தமல்லி- வடபழனி வரையி​லான 14.64 கி.மீ. தொலைவி​லான சேவையைத் தொடங்கி வைக்​கி​றார். பின்னர் முதல்​வர் விஜய்யுடன் பூந்​தமல்​லி​யில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயி​லில் இணைந்து பயணம் செய்​கிறார்.

மேலும் ஐஐடி-​யில் இயங்கி வரும் 10-க்​கும் மேற்​பட்ட முன்​னணி ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்​களின் நிறு​வனர்​களை சந்​தித்து கலந்துரை​யாடு​கி​றார். பின்னர் `இசை​ஞானி இளை​ய​ராஜா இசை கற்​றல் மற்​றும் ஆராய்ச்சி மையத்​தை’ பிரதமர் திறந்து வைக்கிறார். பல்​வேறு தேசிய நெடுஞ்​சாலை திட்​டங்​களை நாட்டுக்கு அர்ப்​பணித்​து, புதிய திட்​டப் பணி​களுக்​கும் அடிக்​கல் நாட்​டு​கி​றார்.

`அம்​ரித் பாரத்’ திட்​டத்​தின்​கீழ், தெற்கு ரயில்​வே​யில், மேம்படுத்தப்​பட்ட பழநி, பரமக்​குடி, நாமக்​கல், அம்​பா ச​முத்​திரம், வேலூர் கன்​டோன்​மென்ட் ரயில் நிலை​யங்​கள், கோவை பகுதியில் 3 ரயில்வே மேம்​பாலங்​கள் மற்​றும் காரைக்​கால் – பேரளம் இடையே 23 கி.மீ. புதிய ரயில் பாதை என ரூ.700 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை​யும் பிரதமர் தொடங்கி வைக்​கி​றார்.

அது மட்டுமல்லாமல் விமான​ நிலை​யத்​தில் இருந்து பரங்​கிமலை ராணுவ மைதானம் வரை, சை​தாப்​பேட்​டை நீதி​மன்​றம் அரு​கில்​ இருந்​து அண்​ணா பல்​கலை. வரை `ரோடு ஷோ’ செல்​கிறார்​.

பிரதமரின் சென்னை வருகையை ஒட்டி 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக 11-ம் தேதி மீனம்பாக்கம், கிண்டி, கோட்டூர்புரம், போரூர், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகள் மற்றும் பிரதமர் பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதோடு இந்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழிக் கருவிகள் பறக்கவிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் செல்லும் அனைத்து பகுதிகளும் போலீஸாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல் லாட்ஜ்கள், தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் தங்கியுள்ளவர்கள் குறித்தும், முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனையிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்

Share This Article
Leave a Comment

Leave a Reply