புதிய ராணுவத் தளபதியாக ஜெனரல் தீரஜ் சேத் பொறுப்பேற்பு

Priya
45 Views
1 Min Read

நாட்டின் புதிய ராணுவத் தளபதியாக ஜெனரல் தீரஜ் சேத் பொறுப்பேற்றார்.

ராணுவத் தளப​தி​ ஜெனரல் உபேந்​திர திவிவேதி இன்று ஓய்வு பெற்றதை அடுத்து, நாட்டின் 31-வது ராணுவ தளபதியாக ஜெனரல் தீரஜ் சேத் இன்று பொறுப்பேற்றார்.

ராணுவத்​தில் சுமார் 40 ஆண்டு கால​மாக பணி​யில் இருக்கும் தீரஜ் சேத், பல பிரிவு​களில் உயர் அதி​காரி​யாக பணி​யாற்​றிய​வர். இவர் கடந்த 1986-ம் ஆண்டு ராணுவத்தின் பீரங்கி படைப்​பிரி​வில் அதி​காரி​யாக சேர்ந்தார். காஷ்மீரில் தீவிர​வாத ஒழிப்பு பணி​யிலும் ஈடுபட்​டுள்​ளார்.

லெப்​டினன்ட் ஜென​ராலாக பதவி உயர்வு பெற்​ற பின் இவர், ராணுவத்​தின் வான் பாது​காப்பு பிரி​வான சுதர்ஸன சக்கர படைப்​பிரிவுக்கு தலைமை தாங்​கி​னார். தென்​மேற்கு மற்​றும் தென் மண்​டலங்​களி​லும் இவர் தலைமை அதி​காரி​யாக பணி​யாற்​றி​யுள்​ளார்.

அங்​கோலா நாட்​டில் ஐ.நா படை அதி​காரி​யாக​வும் பணியாற்​றி​யுள்​ளார். பிரான்ஸின் பாரீஸில் இவர் ராணுவ உயர் அதி​காரி பயிற்​சி​யில் பங்​கேற்​றுள்​ளார்.

முன்னதாக, ஜெனரல் உபேந்​திர திவிவேதி விடைபெறும் விழாவின் ஒரு பகுதியாக புதுடெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று நான் இந்த பொறுப்பை ஜெனரல் தீரஜ் சேத்திடம் ஒப்படைக்கிறேன். அவர் ஓர் அனுபவம் வாய்ந்த வீரர், திறமையான நிர்வாகி.

இந்த பொறுப்பை ஒப்படைக்கும் வேயைில், இந்திய ராணுவத்தின் எதிர்காலம் குறித்து நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். நமது ராணுவம் தனது மரபுகளில் உறுதியாக நிலைத்திருக்கும். தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் விழிப்புடன் இருக்கும். மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலைக்கும் தொடர்ந்து தயாராக இருக்கும்” என தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply