முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் வெளியீடு குறித்து லைகா புரொடெக்ஷன்ஸ், ஜேசன் சஞ்சய் தங்களின் எக்ஸ் தள பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளனர். அதில், ‘அக்டோபர் 2-ம் தேதி கொள்ளைக்கான நாளாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அன்று ‘சிக்மா’ திரையரங்குகளில் ஜொலிக்க இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளனர்.
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த ஆக் ஷன் அட்வென்சர் காமெடி படத்தில் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ள இப்படத்துக்குக் கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முன்னதாக ஜூலை 31-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. தற்போது படம் அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

