‘மண்டாடி’ டீசர் எப்படி? – புதிய உலகத்துக்குள் அழைத்து செல்லும் கடல் பந்தயம்

Priya
1287 Views
1 Min Read

சூரி நடிப்பில் ‘மண்டாடி’ படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

‘மண்டாடி’ படத்தின் இரண்டாவது சிங்கிள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றிருந்த நிலையில், படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. பாய்மர படகுப் போட்டிக்காக வீரர்கள் படகை தயார் செய்யும் பெரும் உழைப்பில் தொடங்குகிறது டீசர்.

தூக்கி நிறுத்தப்பட்ட பாய் மரங்கள் சிறகு விரித்து தயாரானதும் பெருங்கடல் பரப்புக்குள் காற்றின் கைபிடித்து ஓடும் படகுகளை பறவைக் கோணத்தில் பார்க்கும் காட்சி பரவசப்படுத்துகிறது.

மீனவராக வரும் சத்யராஜின் தோற்றம் இன்ப அதிர்ச்சி. கடல்போல் ஆர்ப்பரித்து அடங்கி ஒலிக்கும் இசையுடன் 58 விநாடி ஓடும் இந்த டீசர், நம்மை புதிய ஒரு பந்தய உலகத்துக்குள் அழைத்துச் செல்கிறது.

ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சூரியுடன் மஹிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடலோர மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம், உணர்வுகள், அவர்களின் மன உறுதியை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகி இருக்கும் ‘மண்டாடி’ படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கி இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி இருக்கும் இந்தப் படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply