துருவ் விக்ரமுக்கு மூன்றாவது படத்தில் விருது!

Priya
603 Views
1 Min Read

அறிமுகப் படம், அப்பாவுடன் நடித்த இரண்டாவது படம் ஆகியவற்றில் கிடைக்காத பெயர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘பைசன் காளமாடன்’ மூலம் துருவ் விக்ரமுக்குக் கிடைத்தது.

துணிவும் போராட்டக் குணமும் கொண்ட ஒரு கபடி விளையாட்டு வீரன் கதாபாத்திரத்தில் அட்டகாசமாகப் பொருந்தியிருந்தார். கதாபாத்திரத்துக்கு ஏற்ற தோற்றம், தொடர்ந்து ஒடுக்கப்படும் ஒருவனின் உடல்மொழி, வெற்றிக்கான ஓட்டத்தில் சளைக்காமல் போராடும் குணம் என நடிப்பில் அவர் காட்டிய பரிமாணங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

‘நடிப்பில் குட்டி விக்ரம்’ என்றும் புகழ்ந்தார்கள். அந்த நேர்த்தியான உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது. தனது மூன்றாவது படத்திலேயே சிறந்த நடிகருக்கான ‘சைமா’ விருதை வென்றிருக்கிறார் துருவ் விக்ரம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply