தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைவு…

Priya
1225 Views
2 Min Read

22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று (அக்.3) சென்னையில் பவுனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்கம் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க ஃபெடரல் வங்கி இந்த மாதம் (அக்டோபர்) மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்தின் விலையில் எதிரொலிக்கும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் தங்கம் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இதோடு கடந்த செப்.1-ம் தேதி அன்று ‘தேவையின்றி தங்கம் வாங்காதீர்கள்’ என நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இதையடுத்து தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக குறைந்து வந்த தங்கம் விலை நேற்று (வெள்ளிக்கிழமை) பவுனுக்கு ரூ.760 என உயர்ந்தது. இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் இன்று குறைந்துள்ளது.

இன்றைய விலை விவரம்

சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,675-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,09,400-க்கு விற்பனை ஆகிறது.

24 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைந்து, ஒரு பவுன் 1,19,344-க்கும், 18 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு பவுன் 89,720-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை ஆகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply