இரண்டு நாட்கள் சிறிய ஏற்றத்துக்குப் பின்னர் தங்கம் விலை இன்று (நவ.25) மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.2,360 குறைந்தும், வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்தும் விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்கா ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளதாக நிலவும் எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை கடந்த 9-ம் தேதி முதல் குறையத் தொடங்கியது.
நாள்தோறும் விலை இறங்கி வந்த நிலையில், 11 மாதங்களுக்கு பிறகு, கடந்த 17-ம் தேதி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழ் இறங்கியது. அதன்பிறகும் தங்கம் விலை சரிவு தொடர்ந்தது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்றும் (நவ.24), நேற்று முன் தினமும் (நவ.23) சற்றே அதிகரித்தது. இந்நிலையில், இன்று (நவ.25) தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.295 குறைந்து ஒரு கிராம் ரூ.11,420-க்கும், பவுனுக்கு ரூ.2,360 குறைந்து ஒரு பவுன் ரூ.91,360-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.240 குறைந்து ஒரு கிராம் ரூ.9,345-க்கும், 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.322 குறைந்து ஒரு கிராம் ரூ.12,458-க்கும் விற்பனையாகிறது.
மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.165-க்கும். ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,65,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

