வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில் சென்னை மாவட்டத்தில் 8,500 பேர் விண்ணப்பம்

Priya
4 Views
1 Min Read

இரு நாட்​கள் நடை​பெற்ற வாக்​காளர் பட்​டியல் திருத்த முகாம்​களில் 8,502 பேர் விண்​ணப்​பித்​துள்​ளனர்.

சென்னை தேர்​தல் மாவட்​டத்​துக்கு உட்​பட்ட 16 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் அடுத்த ஆண்டு ஜன.1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்​காளர் பட்​டியல், சிறப்பு சுருக்​கத் திருத்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டு, வரைவு வாக்​காளர் பட்​டியலை, அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​கள் முன்​னிலை​யில் மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜி.எஸ்​.சமீரன் ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று வெளி​யிட்​டார்.

இதன்​படி சென்னை மாவட்​டத்​தில் ஆண் வாக்​காளர்​கள் 14,04,968 பேர், பெண் வாக்​காளர்​கள் 15,09,040 பேர், இதர வாக்​காளர்​கள் 900 பேர் என மொத்​தம் 29,14,908 வாக்​காளர்​கள் உள்​ளனர். வாக்​குச் சாவடிகளின் எண்​ணிக்கை 4,079-ல் இருந்து 4,070 ஆக குறைக்​கப்​பட்​டுள்​ளது.

நடந்து முடிந்த 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலின் போது ஏப்​.1-ம் தேதி வெளி​யிடப்​பட்ட வாக்​காளர் பட்​டியலில் 28,93,505 வாக்​காளர்​கள் இருந்​தனர். தற்​போது வெளி​யிடப்​பட்ட வாக்​காளர் பட்​டியலில் கூடு​தலாக 21,403 வாக்​காளர்​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

நவ.12 முதல் டிச.11-ம் தேதி வரை வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க, திருத்த விண்​ணப்​பிக்​கலாம். கடந்த சனி மற்​றும் ஞாயிற்​றுக்​கிழமை அனைத்து வாக்​குச் சாவடிகளி​லும் சிறப்பு முகாம்​கள் நடத்​தப்​பட்​டன.

இரு நாட்​களி​லும் வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க 5,156 விண்​ணப்​பங்​களும், வெளி​நாடு வாழ் வாக்​காளர் பெயர் சேர்க்க தியாக​ராய நகர் தொகு​தி​யில் ஒரு விண்​ணப்​ப​மும், பெயர் நீக்​கம் கோரி 132 விண்​ணப்​பங்​களும், திருத்​தம் மற்​றும் முகவரி மாற்​றம் குறித்த 3,213 விண்​ணப்​பங்​களும் என மொத்​தம் 8,502 விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டுள்​ளன. நேற்று ஒரே நாளில் 6,804 விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டன. நவ.29-ம்​ தேதி​யும்​ சிறப்​பு மு​காம்​ நடை​பெற உள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply