6 மாத ஆட்சியில் பின்னோக்கிச் செல்லும் தமிழகம் – ஸ்டாலின் குற்றச்சாட்டு

Priya
9 Views
2 Min Read

தவெக என்​கிற அரசி​யல் கட்சி, அரசி​யல் பிணி மட்​டுமல்ல; அது ஒரு சமூகப் பிணி என்றும் தவெக​வின் 6 மாதகால ஆட்​சி​யில் அனைத்து துறைகளி​லும் தமிழகம் பின்​னோக்கிச் செல்​வ​தாகவும் திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின் குற்​றம்​சாட்​டியுள்​ளார்.

சென்​னை​யில் பெரியாரின் ‘குடி அரசு’ இதழின் முழுத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா​ சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் அவர் பேசிய​தாவது: இத்​தனை ஆண்​டுகாலம் நாம் கடினமாக உழைத்து உரு​வாக்​கிய வளர்ச்சி, 6 மாதங்​களில் பின்​னோக்​கிச் சென்​று​விட்​டது. பெரியாரை கொள்​கைத் தலை​வர் என்று தவெக கூறினாலும், அவரது எந்​தக் கொள்கை குறித்​தும் எந்தக் கூட்டங்களிலும் பேசுவதில்லை.

இந்த ஆட்​சிக்கு வழிகாட்​டி​யாகவும், கொள்​கைத் தலை​வ​ராகவும் ஒரு ஜோதிடர்​தான் இருக்​கிறார். மூடநம்​பிக்​கை​யில் மூழ்​கிப்​போனவர்​கள் கவர்ச்​சிக்​காகப் பெரியாரைக் கொள்​கைத் தலை​வர் என்​கிறார்​கள்.

ஒரு விஷயத்​தில்​கூட அவர்​களால் உறுதி​யாக நிற்க முடிய​வில்லை. முதலில் அறிவிக்கிறாகள். பின்னர் அவர்களே அதை ரத்து செய்கிறார்கள். எதிலும் வெளிப்​படைத்​தன்மை இல்லை. இவர்​களால் அண்டை மாநிலத்​தைச் சேர்ந்தவர்கள் நம்​மைக் காமெடியனாகப் பார்க்​கிறார்​கள்.

முன்பு அரிவாள் வெட்டுக்கும் மின்வெட்டுக்கும் இடையேதான் போட்டி எனக் கூறினேன். தற்போது போதைப் பொருளுக்​கும் வன்​கொடுமைக்​கும் இடை​யில்தான் போட்​டி என்ற நிலை மாறியிருக்கிறது.

மேலும் அதி​காரி​களுக்​குத் தொல்லை கொடுப்​ப​தில் அமைச்​சர்​களுக்​கும், எம்​எல்​ஏக்​களுக்​கும் இடை​யிலான போட்​டியும் நில​வுகிறது. பட்​டப்​பகலில் இரட்​டைக் கொலை நடக்கிறது. ஆளுங்​கட்​சியினரே பாலியல் வன் கொடுமையில் ஈடு​படுவ​தால், பெண்​கள் வெளி​யில் நட​மாடுவதற்கே அச்​சம் கொள்​கிறார்​கள்.

அதிக அளவி​லான போதைப்பொருள் கடத்​தல் பிடிபடுவது தமிழகத்​தில்​தான் நடக்​கிறது. இதைக்கூட தமிழக போலீஸார் பிடிப்பதில்லை. மத்திய போதை தடுப்பு பிரிவே பிடிக்கிறது.

மேலும் வெங்​காயம், தக்​காளி, அரிசி விலை​யைக் கேட்​டாலே மயக்​கம் வரு​கிறது. தமிழக உரிமையைக் கர்​நாடக முதல்​வர் காலில் மிதிக்கிறார். எதற்கும் முதல்​வர் வாயை திறக்​க​வில்லை.

மொத்​தத்​தில், 6 மாத தவெக ஆட்​சி​யில் அத்​தனையும் நாசம். தவெக என்​கிற அரசி​யல்கட்சி, அரசி​யல் பிணி மட்டுமல்ல, அது ஒரு சமூகப் பிணி. அதை எதிர்த்து போராட வேண்​டும். இவ்​வாறு பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply