நலம் ஏஐ செயலி மூலம் முன்பதிவு செய்து மருந்துகள் வாங்கும் முறை விரைவில் அறிமுகம் – அமைச்சர் அருண்ராஜ் தகவல்

Priya
745 Views
1 Min Read

அரசு மருத்​துவமனைகளில்​ மருந்​துகள்​ ​வாங்​கு​வதற்​கு நீண்​ட நேரம்​ ​காத்​திருக்​காமல்​, நலம்​ ஏஐ செயலி மூலம்​ ​முன்​ப​திவு செய்​து மருந்​துகள்​ ​வாங்​கும்​ ​முறை ​விரை​வில்​ அறி​முகம்​ செய்​யப்​பட​வுள்​ளது என்​று சு​கா​தாரத்​துறை அமைச்​சர்​ அருண்​ராஜ் தெரி​வித்​தார்​.

தமிழக சு​கா​தாரத்​துறை அமைச்​சர்​ அருண்​ராஜ் நேற்​று சென்​னை​யில்​ இருந்​து ​வி​மானம்​ மூலம்​ ​திருச்​சி சென்​றார்​. ​முன்​ன​தாக, அவர்​ சென்​னை ​வி​மான நிலையத்​தில்​ செய்​தி​யாளர்​களுக்​கு அளித்​த பேட்​டி: தமிழகத்​தில்​ டெங்​கு ​காய்​ச்​சல்​ கட்​டு​க்​குள்​ உள்​ளது. ​

கொசு ஒழிப்​பு பணிகள்​ தீ​விர​மாக நடைபெற்​று வருகின்​றன. அனைத்​து அரசு மருத்​துவமனைகளிலும்​ ​காய்​ச்​சல்​ நோ​யாளிகளை கண்​காணித்​து, உடனடி நட​வடிக்​கைகள்​ எடுப்​பதற்​கு ஏற்​பாடு​கள்​ செய்​யப்​பட்​டுள்​ளன. மருந்​துகள்​ த​யார்​ நிலை​யில்​ உள்​ளன.

அரசு மருத்​துவமனைகளில்​ மருந்​துகள்​ ​வாங்​கு​வதற்​கு நீண்​ட நேரம்​ ​காத்​திருப்​ப​தாக பு​கார்​கள்​ வந்​துள்​ளன. பொது​வாக ​காலை 8 மணி​யில்​ இருந்​து, ​காலை 10 மணிக்​குள்​ பெரும்​பாலான நோ​யாளிகள்​ மருந்​து ​மாத்​திரைகள்​ ​வாங்​க வருவ​தால்​ கூட்​டம்​ அ​திகரித்​து, நீண்​ட நேரம்​ ​காத்​திருக்​க வேண்​டிய நிலை ஏற்​படு​கிறது.

அதை சரி செய்​ய நட​வடிக்​கை எடு​க்​கப்​பட்​டு வருகிறது. அதன்​படி “நலம்​ ஏ ஐ” என்​ற பு​திய ஒரு செயலியை உரு​வாக்​கி உள்​ளோம்​. பய​னாளிகள்​ அந்​த செயலியை பயன்​படு​த்​தி, ​மாத்​திரை, மருந்​துகளை ​வாங்​கும்​ நேரங்​களைக்​ குறிப்​பிட்​டு ​முன்​ப​திவு செய்​து ​கொள்​ளலாம்​.

இத​னால்​ ஒரே நேரத்​தில்​ ஒட்​டுமொத்​த​மாக கூட்​டம்​ கு​விந்​து, ​தாமதங்​கள்​ ஏற்​படுவது த​விர்​க்​கப்​படும்​. பய​னாளிகள்​, குறிப்​பிடப்​பட்​ட நேரங்​களில்​, வந்​து ​மாத்​திரை, மருந்​துகளை ​வாங்​கி செல்​லலாம்​.

இந்​த ​முறை ​விரை​வில்​ அ​முல்​படு​த்​தப்​பட உள்​ளது. ​தாம்​பரம்​ ​மாவட்​ட அரசு மருத்​துவமனையை, மருத்​துவ கல்​லூரி மருத்​துவமனை​யாக ​மாற்​றுவதற்​கான ​திட்​டம்​, பரிசீலனை​யில்​ உள்​ளது. அதுகுறித்​து ​முதல்​வருடன்​ ஆலோசித்​து, ​முறைப்​படி அறி​விக்​கப்​படும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply