குலசேகரப்பட்டினத்தில் இருந்து 2027 மார்ச்சில் முதல் ராக்கெட்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

Priya
730 Views
2 Min Read

தூத்​துக்​குடி மாவட்​டம் குலசேகரப்​பட்​டினத்​தில் புதிதாக அமைக்​கப்​படும் ராக்​கெட் ஏவுதளத்​தில் இருந்து முதல் ராக்​கெட் 2027 மார்ச் அல்​லது ஏப்​ரலில் விண்​ணில் ஏவப்​படும் என்று இஸ்ரோ தலை​வர் நாராயணன் தெரி​வித்​தார்.

இது​குறித்து இஸ்ரோ தலை​வர் வி.நாராயணன் சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: ஜிஎஸ்எல்வி-எஃப்18 ராக்​கெட் மூலம் செலுத்​தப்​பட்ட என்விஎஸ்-03 செயற்​கைக் கோள் சுமார் 38 ஆயிரம் கி.மீ. உயரம் கொண்ட நீள்​வட்​டப் சுற்​றுப்​பாதையில் முதலில் வெற்​றிகர​மாக நிலை நிறுத்​தப்​பட்​டது.

அதன்​பிறகு அதில் உள்ள உந்​து​விசை இயந்​திரத்​தின் உதவியுடன் மேலும் 5,500 கி.மீ. தூரத்​துக்கு செயற்​கைக் கோளை உயர்த்​தி​னோம். தொடர்ந்து, திட்​ட​மிடப்​பட்ட சுற்​றுப்​பாதைக்கு செயற்​கைக் கோளை மாற்​றும் நட​வடிக்​கைகள் நடந்து வரு​கின்​றன.

இந்​தி​யா​வுக்கு சொந்​த​மாக தற்​போது 56 செயற்​கைக் கோள்​கள் உள்​ளன. எனினும், நாட்​டின் அனைத்து தேவை​களை​யும் பூர்த்தி செய்​ய​வும், பல்​வேறு தகவல்​களை ஆராய்ந்து தொடர்ந்து கண்​காணிக்​கவும் ஆயிரக்​கணக்​கான செயற்​கைக் கோள்​கள் நமக்கு தேவைப்​படு​கின்​றன.

ஆளில்லா விண்​கல சோதனை

‘ககன்​யான்’ திட்​டம் சிறப்​பான முறை​யில் முன்​னேறி வரு​கிறது. இத்​திட்​டத்​துக்​காக இது​வரை சுமார் 8,000 பரிசோதனைகள் செய்​யப்​பட்​டுள்​ளன.

விண்​ணுக்கு மனிதர்​களை அனுப்​புவதற்கு முன்​னதாக ஆளில்லா விண்​கலங்​களை அனுப்பி சோதனை செய்​யப்​பட உள்​ளது.

இதற்​கான முதல்​கட்ட ஏவுதல் பணிகள் நடந்து வரு​கின்​றன. ஆளில்லா விண்​கல சோதனைகளைத் தொடர்ந்து, மனிதர்​களை விண்​வெளிக்கு அனுப்​புவதற்​கான நட​வடிக்​கை எடுக்கப்​படும்.

அதேபோல, சந்​திரயான்-4, சந்​திரயான்-5 ஆகிய திட்டங்​களுக்​கான பணிகளும் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. குறிப்​பாக, சந்​திரயான்-4 திட்​டத்தை 2028-ம் ஆண்டு செயல்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

நிலவு குறித்த ஆராய்ச்​சிகளை அடுத்​தகட்​டத்​துக்கு கொண்டு செல்​லும் வகை​யில் இத்​திட்​டங்​களுக்​கான பணிகள் முன்​னெடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. விண்​வெளி, சூரியன் தொடர்​பான அறி​வியல் ஆய்​வு​கள் மூலம் இதுவரை சுமார் 37 டெராபைட் அளவி​லான தகவல்​கள் பெறப்​பட்​டுள்​ளன.

தூத்​துக்​குடி மாவட்​டம் குலசேகரப்​பட்​டினத்​தில், புதிய ராக்​கெட் ஏவுதளம் அமைக்​கும் பணிகள் வேக​மாக நடந்து வரு​கின்​றன. இந்த ஏவுதளத்​தில் இருந்து 2027 மார்ச் அல்​லது ஏப்​ரல் மாதத்​தில் முதல் ராக்​கெட் விண்​ணில் ஏவப்​படும். இதற்​கான பணி தீவிர​மாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply