தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு ஜி.கே.வாசன் வரவேற்பு

Priya
599 Views
1 Min Read

​தாய்மாமன் தங்க மோதிரம் திட்​டத்​துக்கு தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் வரவேற்பு தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தவெக கடந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் அளித்த வாக்​குறு​தியை நிறைவேற்​றும் வகை​யில், தற்​போது தாய்​மாமன் தங்க மோதிரம் திட்​டத்தை தமிழக முதல்​வர் விஜய் தொடங்கி இருப்பது மகிழ்ச்​சிக்​குரியது.

இத்​திட்​டம் சமு​தா​யத்​தில் ஒரு தாய்​மாமனின் உணர்​வுபூர்​வ​மான அன்​பை​யும், ஆதர​வை​யும், நம்​பிக்​கை​யை​யும் பெண்களுக்கு அளிக்​கும் வகை​யில் அமைந்​துள்​ளது.

மகளிருக்கு ஒவ்​வொரு குடும்​பத்​தோடும் ஏற்பட இருக்​கின்ற பாசம், பந்​தம், நம்​பிக்கை அதன் அடிப்​படை​யில் ஏற்​படும் நல்​லுறவு வலுப்​படும்.

அதோடு குழந்தை பிறந்த நாள் அன்றே அவர்​களு​டைய எதிர்​காலம் வசந்த கால​மாக மாறு​வதற்கு அடை​யாள​மாக இத்​திட்​டம் தி​கழும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply