அக்‌ஷய் குமாரின் ‘சாமுக்’ மே 28-ல் ரிலீஸ்

Priya
800 Views
1 Min Read

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் அறிவியல் புனைகதை படமான ‘சாமுக்’ 2027 மே 28 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை அக்‌ஷய் குமார் தனது சமூக வலை தள பக்கத்தில் பகிர்ந்து இத்தகவலை தெரிவித்துள்ளார். அதில், கருப்பு திரவம் ஒழுக ஒரு வேற்றுலக மிருகம் வாய் பிளந்தபடி இருக்க, அக்‌ஷய் குமார் காட்டுக்குள் துப்பாக்கி ஏந்தியபடி அதிரடி தாக்குதலுக்கு தயாராக நிற்கிறார்.

இத்துடன், ‘எதிரி மனிதன் இல்லை; ஆனால் இந்தப் போராட்டம் மனித குலத்துக்கானது. பின்வாங்குவதற்கு வாய்ப்பு இல்லை. உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளில் ‘சாமுக்’ 2027 மே 28 அன்று படையெடுக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ‘சானக்’, ‘இன்சைடு எட்ஜ்’ படங்களை இயக்கிய கனிஷ்க் வர்மா இயக்கி இருக்கிறார்.

இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஒரு பிரம்மாண்டமான ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். இப்படம் சர்வதேச தரத்திலான சர்வைவெல் த்ரில்லர் படமாக இருக்கும் என படகுழுவினர் முன்பு தெரிவித்திருந்தனர்.

தற்போது லண்டனில் படப்பிடிப்பு நடந்து வரும் இந்தப் படத்தின் வேற்றுலக உயிரினங்கள் தொடர்பான காட்சிகளை ‘ஏலியன்’, ‘பிரிடேட்டர்’ படங்களில் பணியாற்றிய அலெக் கில்லிஸும், சண்டைக் காட்சிகளை, ‘மிஷன் இம்பாசிபிள்’, ‘ஸ்டார் வார்ஸ்’, ‘நோ டைம் டூ டை’ போன்ற படங்களில் பணியாற்றிய பிரிட்டனைச் சேர்ந்த சண்டைக் காட்சி இயக்குநர் லூக் டம்பரும் வடிவமைக்கின்றனர்.

முன்னதாக அக்‌ஷய் குமாரும், விபுலும் ‘ஆக்கேன்’, ‘வக்த்: எ ரேஸ் அகைன்ஸ்ட் டைம்’, ‘நமஸ்தே லண்டன்’, ‘சிங் இஸ் கிங்’, ‘ஹாலிடே’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply