அன்பில் மகேஸின் ஜாமீன் மனு மீதான விசாரணை நவ.24-க்கு ஒத்திவைப்பு

Priya
765 Views
1 Min Read

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க 400 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 24-ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் வழங்க 400 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் அக்டோபர் 26-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை, சென்னை ஊழல் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து நவம்பர் 10-ஆம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மத்திய குற்றப் பிரிவு போலீஸாரின் பதில் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்டு அன்பில் மகேஸின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 24-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply