பணியின்போது உயிரிழக்கும் போலீஸார் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வரின் 59 முக்கிய அறிவிப்புகள்

Priya
877 Views
2 Min Read

பணி​யின்​போது உயி​ரிழக்கும் போலீ​ஸார் குடும்​பத்​துக்கு ரூ.1 கோடி இழப்​பீடு, கருணைத் தொகை ரூ.30 லட்​ச​மாக உயர்த்தி வழங்​கப்​படும் என்று முதல்​வர் விஜய் அறி​வித்​தார்.

சட்​டப்​பேர​வை​யில் காவல்​துறை, தீயணைப்பு மற்​றும் மீட்​புப் பணி​கள் துறை​களுக்​கான மானியக் கோரிக்​கைகள் மீது நேற்று விவாதம் நடந்​தது.

முன்​ன​தாக இத்துறை​கள் குறித்து 59 முக்​கிய அறி​விப்​பு​களை வெளி​யிட்டு முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது: போதைப் பொருள் பயன்​பாட்டை திறம்பட ஒழிக்​கும் கிராமங்​களை ஊக்​குவிக்​கும் வகை​யில், தலா ரூ.10 லட்சம் வீதம் 50 கிராமங்​களுக்கு பரிசுத்தொகை வழங்​கப்​படும்.

பாது​காப்​பு, புல​னாய்​வு, விசாரணை உள்​ளிட்ட பணி​களுக்​குத் தேவை​யான நவீன உபகரணங்​கள் வாங்​கு​வது உட்பட காவல்​துறையை நவீனப்​படுத்த ரூ.212 கோடி ஒதுக்​கப்​படும்.

காவல் நிலை​யங்​களின் அன்​றாட செல​வினங்​களுக்​கான மாதாந்​திர நிதி ரூ.3,750-ல் இருந்து ரூ.30 ஆயிர​மாக​வும், ரூ.6 ஆயிரத்​தில் இருந்து ரூ.40 ஆயிர​மாகவும், ரூ.8,250-ல் இருந்து ரூ.50 ஆயிர​மாக​வும் உயர்த்தி வழங்​கப்​படும். சிறப்​புப் பிரிவு​களுக்​கும் இந்த வசதி விரிவுபடுத்​தப்​படும்.

பணி​யின்​போது சட்​டம்​- ஒழுங்கை காக்​கும் நடவடிக்​கை​யில் உயி​ரிழக்​கும் காவலர்​களின் குடும்​பங்​களுக்கு ரூ.1 கோடி இழப்​பீடு வழங்​கப்​படும். பணிக்​காலத்​தில் உயி​ரிழக்​கும் காவலர்​களின் குடும்​பங்​களுக்கு வழங்​கப்​படும் கருணைத் தொகை​யும் ரூ.20 லட்​சத்தில் இருந்து ரூ.30 லட்​ச​மாக உயர்த்​தப்​படும்.

காவல் ​துறை​யின் செயல்​திறனை மேம்​படுத்த ரூ.200 கோடி​யில் புதிய வாக​னங்​கள் வாங்​கப்​படும். ஆவடி, தாம்​பரம் காவல் ஆணை​யரகங்​கள் மறுசீரமைக்​கப்பட உள்​ளன. காவலர் குடி​யிருப்​பு​களில் கழி​வுநீர் மற்​றும் வடி​கால் அமைப்​பு​கள் ரூ.36 கோடி​யில் புதுப்​பிக்​கப்​படும்.

வண்​டலூர் அருகே உள்ள காவலர் உயர் பயிற்​சி​யகத்​தில் ரூ.23 கோடி​யில் உள்​விளை​யாட்டு அரங்​கம் மற்​றும் வெளிப்​புற விளை​யாட்டு வசதி​கள் ஏற்​படுத்​தப்​படும். சேலம், விழுப்​புரம் தடய அறி​வியல் ஆய்​வகங்​களில் ரூ.14 கோடி​யில் மரபணு ஆய்​வுப் பிரிவு​கள் அமைக்​கப்​படும்.

தீயணைப்​புத் துறை

தமிழகத்​தில் 6 இடங்​களில் தீயணைப்பு, மீட்​புப் பணி நிலை​யங்​கள் ரூ.12.84 கோடி செல​வில் தரம் உயர்த்​தப்​படும். 15 இடங்​களில் ரூ.65.90 கோடி​யில் புதிய கட்​டிடங்​கள் கட்​டப்​படும். தீயணைப்பு துறைக்கு ரூ.60 கோடி​யில் 50 நீர்​தாங்கி வண்​டிகள், ரூ.17.50 கோடி​யில் 50 துரித மீட்பு ஊர்​தி​கள், ரூ.60 கோடி​யில் 2 வான்​நோக்கி உயரும் ஏணி ஊர்​தி​கள், ரூ.8 கோடி​யில் 10 கனரக மீட்பு வாக​னங்​கள் வழங்​கப்​படும். மேலும், கண்​காணிப்பு மற்​றும் பளுதூக்​கும் பணி​களுக்​காக 35 ட்ரோன்​கள் வாங்​கப்பட உள்​ளன.

பெண் வீரர்கள் நியமனம்

தீயணைப்​புத் துறை​யில் ‘தீயணைப்​போர்’ என்ற பதவி ‘தீயணைப்பு வீரர்’ என மாற்​றப்​படும். புதி​தாக பெண் தீயணைப்பு வீரர்​கள் நியமிக்​கப்​படு​வர்.

பணி​யாளர்​களுக்கு காவல்​துறை​யினருக்கு இணை​யான சீருடைப்​படி வழங்​கப்​படும். பொங்​கலன்று வழங்​கப்படும் முதல்​வர் தீயணைப்​பு பணி​கள் பதக்​கம் எண்​ணிக்​கை​யும், படித்​தொகை​யும் உயர்த்​தப்​படும். ரூ.3.20 கோடியில் 10 ஆய்வுக்குழுக்​கள் கொண்ட புதிய ஆய்​வுப் பிரி​வு அமைக்​கப்​படும் என்பது உட்பட 59 அறி​விப்​பு​களை முதல்​வர் வெளி​யிட்​டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply