சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் வெற்றி விருதுகள்: அமைச்சர் விஜயலட்சுமி அறிவிப்பு

Priya
705 Views
2 Min Read

சட்​டப்​பேர​வை​யில் நேற்று பால்​வளத்​துறை அமைச்​சர் சி.​விஜயலட்​சுமி புதிய அறி​விப்​பு​களை வெளி​யிட்டு பேசி​ய​தாவது: ஜெர்சி கலப்​பின கன்​றுகளில் பால் உற்​பத்தி திறன் மேம்​படுத்த விஞ்​ஞானப் பூர்​வ​மான, கன்று வளர்ப்பு மற்​றும் இனவிருத்தி மேலாண்மை பணி​கள் ரூ.10 கோடி​யில் செயல்​படுத்​தப்​படும்.

50 ஆயிரம் கறவை மாடு​களில் கன்று ஈனும் கால இடைவெளியைக் குறைக்​கும் வகை​யில் இனவிருத்தி மேலாண்மை பணி​கள் ரூ.10 கோடி​யில் மேற்​கொள்​ளப்​படும்.

கிராமப்​புறங்​களில் கொள்​முதல் செய்​யப்​படும் ஆரம்ப நிலை பாலின் தரத்​தினை பாது​காக்க 60 தொகுப்பு பால் குளிர்​விப்​பான்​கள் மற்​றும் 40 குளிர்​விப்பு நிலை​யங்​களுக்கு புதிய கட்​டிடங்​கள் ரூ.25.45 கோடி​யில் நிறு​வப்​படும். 15 ஆயிரம் பால் உற்​பத்​தி​யாளர்​களுக்கு கறவை மாடு​கள் பராமரிப்பு மற்​றும் தூய பால் உற்​பத்தி குறித்து பயிற்சி மற்​றும் 700 ஒன்​றிய பணி​யாளர்​கள் மற்​றும் 1000 சங்க பணி​யாளர்​களுக்கு ரூ.1.76 கோடி​யில் தர மேலாண்மை பயிற்சி வழங்​கப்​படும்.

100 தொகுப்பு பால் குளிர்​விப்பு நிலை​யங்​களை மேம்​படுத்​தும் வித​மாக ரூ.8.81 கோடி​யில் துணை உபகரணங்​கள் நிறு​வப்​படும். ஈரோடு ஒன்​றி​யத்​தில் உள்ள தர ஆய்​வகத்​துக்கு ரூ.31.5 லட்​சத்​தி​லும், திரு​வண்​ணா​மலை ஒன்​றி​யத்​தில் உள்ள தர ஆய்​வகத்​துக்கு ரூ.11.25 லட்​சத்​தி​லும் கூடு​தல் உபகரணங்​கள் நிறு​வும் பணி​கள் மேற்​கொள்​ளப்​படும்.

அம்​பத்​தூர் பால்​பண்ணை ரூ.2 கோடி​யில் மேம்​படுத்​தப்​படும். பால் உற்​பத்தி மற்​றும் பால் கொள்​முதலை ஊக்​குவிக்​கும் வகை​யில், ஒவ்​வொரு ஒன்​றி​யத்​தி​லும் சிறப்​பாக செயல்​படும் முதல் மூன்று பால் உற்​பத்​தி​யாளர்​கள், மகளிர் உற்​பத்​தி​யாளர்​கள், பால் உற்​பத்​தி​யாளர்​கள் கூட்​டுறவு சங்​கங்​கள் மற்​றும் சங்​கச் செய​லா​ளர்​கள் தேர்வு செய்​யப்​பட்டு “ஆவின் வெற்றி விருதுகள் மற்​றும் பரிசுகள் வழங்கி கவுரவிக்​கப்​படு​வர்.

ராஷ்டிரிய கோகுல் மிஷன் திட்​டத்​தின் கீழ், ரூ.5.18 கோடி​யில் 112 சிறந்த மரபியல் திறனுள்ள பொலி​காளை​கள் உற்​பத்தி செய்​யப்​பட்டு ஜெர்சி கலப்​பின பொலி​காளை பண்​ணை​களுக்கு வழங்​கப்​படும். தரமான பசுந்​தீவன உற்​பத்​தியை ஊக்​குவிக்​கும் வகை​யில் ரூ.50 லட்​சம் மதிப்​பிலான 25 மெட்​ரிக் டன் பசுந்​தீவன புல் விதைகள் 5 ஆயிரம் பால் உற்​பத்​தி​யாளர்​களுக்கு வழங்​கப்​படும்.

கடந்த காலங்களில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக ஆவின் நிர்வாகத்துக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் முதல்வரின் ஒப்புதலுடன் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

மேலும், பால்வளத்துறையில் நடந்த முறைகேடுகளை கண்டறிய குழு அமைக்கப்பட்டு அதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மெட்ரோ ரயில்நிலையங்களில் ஆவின் பார்லர்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply