பாரதிராஜாவும் கே.பாக்யராஜும் கடவுள் அனுப்பிய குழந்​தைகள்: ரஜினிகாந்த் உருக்​கம்

Priya
972 Views
3 Min Read

சமீபத்​தில் மறைந்த இயக்​குநர்​கள் பாரதிராஜா மற்​றும் கே.பாக்யராஜ் ஆகியோ​ருக்கு ‘ராஜகோபுரங்​கள்’ என்ற பெயரில் திரை​யுல​கினர் சார்​பில் நினைவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்​சி​யில் அவர்​களின் மார்​பளவு சிலை திறக்​கப்​பட்​டது. கமல்ஹாசன் உள்பட பலர் கலந்து கொண்ட இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

பார​தி​ராஜா​வும் பாக்​ய​ராஜும் சாதாரண மனிதர்​கள் இல்ல. அசா​தா​ரண​மானவர்​கள். அவர்​களைப் பற்றி எவ்​வளவு வேண்டுமானாலும் பேசலாம். பார​தி​ராஜா பொது​வாக மத்​தவங்க கதையை​த்தான் படமாகப் பண்​ணு​வார். அவர் கதை எழுத மாட்டார். ஒரு கதாசிரியர் வந்து கதை சொன்​னா, அதைக் கேட்கும்​போதே ஒரு 5 நிமிஷத்​துல அந்த கதை எந்த ரூட்ல போகுது, அந்த கதா​பாத்​திரங்​கள் என்​னாகும், எங்கே இடைவேளை வரும், எப்​படி படம் முடி​யும் அப்​படிங்​கறது தெரிஞ்சிடும்.

‘சரி போயா, அப்​புறம் பார்த்​துக்​கலாம், நான் சொல்​றேன்​யா’ என்று அனுப்பி விடு​வார். அதே​மா​திரி ஒரு கதையை கேட்​கும்​போது அவர் நினைக்​கிற மாதிரி எது​வுமே நடக்​காமல் போயிட்டு இருந்​தா, ஆர்​வமா கேட்​பார். ‘நான் நினைச்​சது ஒண்ணு, இது வேறு மாதிரி இருக்​கே! ரொம்ப இன்ட்​ரஸ்​டிங்கா இருக்​கு, மறு​படி​யும் சொல்​லு’ என்று முழுக் கதையை​யும் கேட்​பார்.

எதிர்​பா​ராத 2, 3 ட்விஸ்ட் அந்த கதை​யில வந்​தா, அப்​படியே உட்கார வச்​சு, ‘நீ நாளைக்கு வா’ன்னு சொல்​லிட்​டு, கதையை எங்​கெங்க டெவலப் பண்​ணணும், எந்த கேரக்​டர் எப்​படி இருக்கணும்னு சொல்​லி, கதை கொண்டு வந்​தவங்​களுக்கு ஒரு கிரீடத்தை சூட்டி அனுப்பி வைப்​பார். பாக்​ய​ராஜிடம் கதைச் சொன்​னா, ஒரு பக்​கம் கேட்​டுக்​கொண்டே மற்​றொரு​புறம் எப்​படி திரைக்​கதை அமைக்​கலாம்னு யோசிச்​சிட்டி ருப்​பார். இரண்​டும் ஒரே நேரத்​துல நடக்​கும். அது அவருடைய அசாத்​திய திறமை. அதனால​தான் அவர் திரைக்​கதை மன்​னன்.

தனக்கு ஆங்​கிலம் வராது என்ற காம்ப்​ளக்ஸ் இரண்டு பேருக்​குமே உண்​டு. கமல்​ஹாசன் ஆங்​கிலத்​துல பேசறதை கேட்டு பாரதிராஜா ரொம்ப பாராட்​டு​வார். நடிகை ராதிகா இலங்​கை​யில பிறந்து லண்​டன்ல வளர்ந்​தவங்க. அவங்க ஆங்​கிலம் பேசறதை பார்த்​து​தான் பார​தி​ராஜா தன்​னோட படத்​துல அறி​முகப்​படுத்தியிருப்​பார். எந்த விஷ​யத்தை எடுத்​துக்​கொண்​டாலும் ஏற்கெனவே பண்​ணிக் கொண்​டிருந்​ததை பண்​ணி​னா, நாம ஜெயிக்க முடி​யாது.

வித்​தி​யாசமா பண்​ணணும். அதைத்​தான் இவங்க ரெண்டு பேரும் செய்​தாங்க. அந்த காலத்​துல கிராமத்து கதைகள்ல, பண்ணையார், ஜமீன்​தார், பணக்​காரன், ஏழை விஷ​யங்​கள்​தான் இருக்​கும். பார​தி​ராஜா அதை மாற்​றி, ஒரு டெய்​லர், பார்​பர், சின்ன குடும்​பம் அவங்​களோட கதைகளை சினி​மா​வில் காட்​டி​னார்.

பாக்​ய​ராஜும் அப்​படித்​தான். பாக்​ய​ராஜ் இயக்​குந​ராகணும்​னு​தான் நினைச்​சிருப்​பார். ஆனா பார​தி​ராஜா, யாரை​யும் என்​னால ஹீரோ​வாக்க முடி​யும்னு நம்​பிக்​கையா இருந்​தார். அதனால​தான் பாக்​ய​ராஜை ஹீரோவா ஆக்​கி​னார். ரஜினி​காந்த்​தான் ஹீரோவுக்கான இமேஜை உடைச்​சார்னு சொல்​வாங்க. ஆனா, பாக்​ய​ராஜ்​தான் ஹீரோ இமேஜை உடைச்​சார். அந்த உடம்​பு, அந்த வாய்​ஸ், அந்த கண்​ணாடி… நினைச்சு பாருங்​களேன்.

இவங்​கள்​லாம் கடவுள் அனுப்​பிய குழந்​தைகள். அவங்க திறமையாலயோ, உழைப்​பாலயோ முன்​னேறி வந்​தாங்​கன்னு சொன்னா நான் நம்ப மாட்​டேன். எத்​தனையோ திறமை​சாலிகள் உழைக்​கறதுக்கு காத்​திருக்காங்க. ஆனா, சந்​தர்ப்​பம் கிடைக்கணும். அதை யார் கொடுப்​பா? ஆண்​ட​வன் கொடுப்​பான். இப்ப இவங்க ரெண்டு பேரும், கூட இல்​லைங்​கறது வருத்​தமா இருக்​கு. ‘படையப்​பா’ படம் ஹிட்​டானதும் பார​தி​ராஜா கூப்​பிட்​டு, “நீ பாட்டி வடை சுடற கதையை சொன்​னாலும் படம் பிச்​சிட்டு போகும்​யா”னு சொன்​னார்.

60 வயசுக்கு மேல ஆண்​ட​வன் பெல் அடிப்​பான். எல்​லாம் முடிச்சுக்கோ, எங்​கெங்க ஊர் சுத்​தணுமோ, யார் யாரையெல்லாம் பார்க்​கணுமோ அதையெல்​லாம் பண்​ணிட்​டு, இதயம், லிவர் எல்​லாத்​தை​யும் செக் பண்​ணிக்​கோன்னு சொல்வான். 70 வயசு ஆச்​சுன்னா லிஸ்ட்ல போட்​டாச்​சுனு அர்த்தம். எந்​த நேர​மும்​ அழைப்​பு வரலாம்​. இவ்​வாறு ரஜினி​காந்​த்​ பேசி​னார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply