இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்லாக, உள்நாட்டு தனியார் நிறுவனத்தால் முழுமையாக வடிவமைக்கப்பட்ட முதல் ஆர்பிட்டல் வகை ராக்கெட்டான ‘விக்ரம்-1’ இன்று (ஜூலை 18) விண்ணில் ஏவப்படுகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11:30 மணிக்கு இந்த வரலாற்று சிறப்புமிக்க சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிக்கட்ட தயாரிப்புகள் நிறைவடைந்து, தரைக் கட்டுப்பாட்டு மையத்துடனான தகவல் தொடர்பு சோதனைகள் மற்றும் ரேடார் கண்காணிப்பு சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், ராக்கெட்டின் அனைத்து நிலைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, ஏவுதளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான 36 மணி நேர கவுண்டன் நேற்று முன்தினம் தொடங்கியது.

