முன்மாதிரி தொகுதியாக மாற்றும் வகையில், பெரம்பூரில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் தொடர்பாக மாநக ராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் நேரில் ஆய்வு செய்தார்.
பெரம்பூர் தொகுதியில் 2001, 2006, 2011 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரே தொடர்ந்து வெற்றி பெற்றார்.
இக்கட்சி, திமுக, அதிமுகவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், அக்கட்சிகள் ஆளுங்கட்சியாக வரும் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கட்சியாகவே செயல்பட்டது.
2016-ல் அதிமுக ஆட்சி யில் அக்கட்சி எம்எல்ஏ வாக இருந்தாலும், குறுகிய காலத்தில் பதவியை இழந்தார். அதன் பின்னர், 2019 இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் வெற்றி பெற்று, அவரும் எதிர்க்கட்சியாக இருந்தார். 2021-ல் தான் பெரம்பூர் தொகுதிக்கு ஆளுங்கட்சி எம்எம்எல்ஏ கிடைத்தார்.
வளர்ச்சி திட்டங்கள்
அதன் மூலம் சில திட்டங்கள் பெரம்பூருக்கு வந்தாலும், 2001 முதல் 2021 வரை சுமார் 20 ஆண்டுகள், பெரம்பூர் தொகு திக்கு வளர்ச்சி திட்டங்களை எம்எல்ஏக்களால் கொண்டுவர முடியாமல் பின்தங்கியே இருந்தது. இப்போது பெரம்பூர், முதல் வர் தொகுதியாக மாறியுள்ளதால், இத்தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற மாநகராட்சி திட்ட மிட்டுள்ளது.
விளையாட்டு வளாகம்
அதன்படி, இத்தொகு தியில் முத்தமிழ் நகரில் புதிய சமுதாய நலக்கூடம் முல்லை நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ் விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள், வடக்கு அவென்யூ சாலையில் நவீன உணவு வளாகம், சத்தியமூர்த்தி நகரில் புதிய பன்னோக்கு மருத்துவமனை, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை அருகே கால்பந்து மைதானம், கிரிக்கெட்வலைப் பயிற்சி, இறகுப் பந்து, கைப்பந்து மைதானம் உள்ளிட்ட ஒருங் கிணைந்த விளையாட்டு வளாகம் உள்ளிட்டவைகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்காக இப்பகுதிகளில் மாநகராட்சி ஆணை யர் ஜி.எஸ்.சமீரன் நேற்று நேரில் ஆய்வு செய்து, அதி காரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, இணை ஆணையர் (பணிகள்) செ.சரவணன், மத்திய வட்டார ஆணையர் எச்.ஆர்.கவுஷிக், மண்டல அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

