“தவெக கூட்டணியில் உள்ளது மதிமுக; இனி எல்லாமே வெற்றிதான்” – வைகோ உற்சாகம்

Priya
34 Views
1 Min Read

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே கலவாக்கம் பகுதியில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை பார்வையிட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வருகை தந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ‘‘சீமைக்கருவேல மரங்கள் தமிழக சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகக் கூறினார். மதிமுக ஓட்டுக்காக இயங்கும் கட்சி அல்ல; நாட்டுக் காக செயல்படும் இயக்கம்” என்றார்.

அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா விவகாரம் குறித்து பேசும்போது திமுகவை கடுமையாக விமர்சித்தார். குதிரை பேரம் குறித்து பேசுபவர்கள், முதலில் அதை தொடங்கியது யார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்தது திமுகதான். தவெகவுடன் மதிமுக கூட்டணியில் உள்ளது. இந்த 5 ஆண்டுகள் மட்டுமல்ல, அடுத்த 5 ஆண்டுகளிலும் விஜய்தான் முதல்வராக வருவார்.

எங்களுக்கு இனி எடுத்ததெல்லாம் வெற்றிதான் என்று வைகோ கூறினார். இதையடுத்து, கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவருக்கும் வைகோவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வைகோவும் ஆவேசமாக எதிர்க் கேள்விகள் எழுப்பினார். பத்திரிகையாளர்களுக்கு எதிராக மதிமுக நிர்வாகிகளும் ஆவேசப்பட்டனர். இதனால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பு பாதியிலேயே முடிந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply